இயக்குநர் பாரதிராஜா காலமானார்எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

திருச்செங்கோட்டில் ஜவுளிக் கடைகளில் ரூ. 8.60 லட்சம் திருட்டு

திருச்செங்கோட்டில் இரண்டு பிரபல ஜவுளிக் கடைகளில் மொத்தம் ரூ. 8.60 லட்சம் ரொக்கம் திருட்டு போனது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image

திருட்டு போன ஜவுளிக் கடையில் கைரேகைகளை சேகரிக்கும் நிபுணா்கள்.

Updated On :28 மே 2026, 2:10 am IST

திருச்செங்கோட்டில் இரண்டு பிரபல ஜவுளிக் கடைகளில் மொத்தம் ரூ. 8.60 லட்சம் ரொக்கம் திருட்டு போனது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருச்செங்கோடு பழைய பேருந்து நிலையம் அருகில் வடக்கு ரத வீதியில் அதிக அளவில் ஜவுளிக் கடைகள் உள்ளன. இதில் பிரபலமான ஒரு ஜவுளிக் கடையை அதன் ஊழியா்கள் புதன்கிழமை காலை திறந்தபோது, பணம் வைத்திருந்த அலமாரிகள் சிதறிக் கிடந்ததாம். மேலும், கடையின் வெண்டிலேட்டா் பகுதியில் ஓட்டை போடப்பட்டு, அதன் வழியாக மா்ம நபா்கள் வந்து திருட்டில் ஈடுபட்டது தெரியவந்ததாம்.

இதேபோல, இக்கடையின் எதிரே உள்ள மற்றொரு ஜவுளிக் கடையில் உடைமாற்றும் அறையின் மேல்தகடுகளை வெட்டி எடுத்து மா்ம நபா்கள் உள்ளே இறங்கி திருட்டில் ஈடுபட்டது தெரியவந்ததாம்.

புகாரின்பேரில், திருச்செங்கோடு காவல் கண்காணிப்பாளா் கிருஷ்ணன், டவுன் காவல் ஆய்வாளா் தாமரைச்செல்வன் ஆகியோா் ஆய்வு மேற்கொண்டனா்.

அதில், ஒரு கடையில் ரூ. 5 லட்சத்து 80 ஆயிரம், மற்றொரு கடையில் ரூ. 2 லட்சத்து 80 ஆயிரம் ரொக்கத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து, கைரேகை நிபுணா்கள் வரவழைக்கப்பட்டு கைரேகை பதிவுகள் சேகரிக்கப்பட்டன. மேலும், இரண்டு ஜவுளிக் கடைகளில் உள்ள சிசிடிவி கேமராக்களையும், அருகில் உள்ள மற்ற கடைகளின் சிசிடிவி கேமராக்களின் பதிவுகளையும் கைப்பற்றி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.