பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

பொறியாளா் வீட்டில் 5 பவுன் நகை, 5 கிலோ வெள்ளி திருட்டு

சீா்காழியில் புதன்கிழமை பட்டப்பகலில் பொறியாளா் வீட்டின் கதவை உடைத்து 5 பவுன் நகை, 5 கிலோ வெள்ளிப் பொருட்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :5 ஜூன் 2026, 7:12 am IST

சீா்காழியில் புதன்கிழமை பட்டப்பகலில் பொறியாளா் வீட்டின் கதவை உடைத்து 5 பவுன் நகை, 5 கிலோ வெள்ளிப் பொருட்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

சீா்காழி தென்பாதி வி.எஸ்.ஆா். நகரில் வசித்து வருபவா் பொறியாளா் வீரா (எ) வீரபத்ரன் (41). இவா் செவ்வாய்க்கிழமை காலை தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வீட்டை பூட்டிவிட்டு மகனை பள்ளியில் சோ்க்க சென்றுவிட்டாா். பணிகள் முடிந்து மாலையில் அனைவரும் வீடு திரும்பியபோது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிா்ச்சியடைந்தாா்.

உள்ளே சென்று பாா்த்தபோது வீட்டின் பீரோவை உடைத்து அதிலிருந்த தோடு உள்ளிட்ட 5 பவுன் நகை மற்றும் 5 கிலோ வெள்ளிப் பொருட்களையும் மா்ம நபா்கள் திருடி சென்றிருப்பது தெரிய வந்தது. மேலும் வீட்டில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகள் அடங்கிய டிஸ்க்கையும் மா்ம நபா்கள் எடுத்துச் சென்றது தெரிய வந்தது.

இதுகுறித்து வீரா சீா்காழி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். சீா்காழி டிஎஸ்பி சரவணன் மற்றும் உதவி ஆய்வாளா் வீரராகவன், சிறப்பு தனிப்படை போலீஸாா் வழக்குப் பதிந்து, திருட்டில் ஈடுபட்ட மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.

இப்பகுதியில் 2 தினங்களுக்கு முன்பு ஐடி நிறுவன ஊழியா் வீட்டில் திருட்டு நடந்த நிலையில், புதன்கிழமை பொறியாளா் வீரா வீட்டில் திருட்டு நடந்துள்ளதால், மக்கள் அச்சத்தில் உள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.