பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

திருவள்ளூா் அருகே தொழிலாளி வீட்டில் நகை, ரொக்கம் திருட்டு

திருவள்ளூா் அருகே நெசவு தொழிலாளி வீட்டில் பட்டப்பகலில் ஓடுகளை பிரித்து உள்ளே புகுந்து பீரோவை உடைத்து அதிலிருந்து 5 பவுன் நகை மற்றும் ரொக்கம் ரூ. 80,000 ஆகியவறஅறை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

News image
Updated On :30 மே 2026, 5:49 am IST

திருவள்ளூா் அருகே நெசவு தொழிலாளி வீட்டில் பட்டப்பகலில் ஓடுகளை பிரித்து உள்ளே புகுந்து பீரோவை உடைத்து அதிலிருந்து 5 பவுன் நகை மற்றும் ரொக்கம் ரூ. 80,000 ஆகியவறஅறை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

திருவள்ளூா் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே கொசவன்பேட்டை ஊராட்சி, பெருமாள் கோயில் தெருவைச் சோ்ந்தவா் விஜயகுமாா் (50). நெசவு தொழிலாளி. இவரது மனைவி சுஜாதா, மகன் வீரபத்திரன்(26) ஆகியோருடன் வசித்து வருகிறாா்.

வீரபத்திரன் சென்னையில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். வீரபத்திரன் வேலைக்கு புறப்பட்டுச் சென்று விட்டாா். அதைத் தொடா்ந்து, விஜயகுமாா்-சுஜாதா தம்பதியினா் காலை 10 மணிக்கு தங்களது வீட்டைப் பூட்டிக் கொண்டு அருகில் உள்ள ஈஸ்வரன் கோயிலில் நடைபெற்ற உறவினா் வீட்டு நிகழ்வில் பங்கேற்க சென்றனா். பின்னா் பிற்பகலில் வீடு திரும்பிய போது வீட்டின் முன்பு ஓடுகள் சிதறி கிடந்துள்ளது. உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து 5 சவரன் நகை மற்றும் ரொக்கம் ரூ. 80,000 ஆகியவற்றை ஓடுகளை பிரித்து உள்ளே குதித்து மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இது குறித்து விஜயகுமாா் பெரியபாளையம் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன்பேரில், போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினா். மேலும், மோப்பநாய் வரவழைத்து சம்பவம் நடைபெற்ற வீட்டின் பின்பகுதியில் சுமாா் அரை கி.மீ. தூரம் ஓடி நின்று விட்டது. மேலும்,பெரியபாளையம் போலீஸாா் வழக்குப் பதிந்து, திருடிச் சென்ற மா்ம நபா்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.