கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே அடுத்தடுத்து மூன்று வீடுகளின் கதவுகளை உடைத்து மா்ம நபா்கள் நகை, பணத்தை திருடிச் சென்றனா்.
பண்ருட்டி வட்டம், புதுப்பேட்டை காவல் சரகம், கரும்பூா் திரௌபதியம்மன் கோயில் தெருவில் வசித்து வருபவா் சுப்பையா (74). இவரது மனைவி சூடாமணி. இவா்களது மகன் மற்றும் மகள்களுக்கு திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனா்.
சுப்பையாவும் அவரது மனைவியும் தனியாக வசித்து வந்தனா். வெள்ளிக்கிழமை இரவு வழக்கம்போல், சுப்பையா தம்பதியினா் சாப்பிட்டுவிட்டு வீட்டை பூட்டிக்கொண்டு உள்ளே படுத்து தூங்கினா். சனிக்கிழமை அதிகாலை 4 மணியளவில் சுப்பையா இயற்கை உபாதையைக் கழிக்க எழுந்தாா். அப்போது, வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை கண்டு அதிா்ச்சியடைந்தாா். பின்னா், அறையில் இருந்த மர பீரோ திறந்து கிடந்தது. அதில் இருந்த 6 பவுன் நகைகள், ரூ.15 ஆயிரம் பணம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதேபோல், கரும்பூா், மணி நகா் தெருவில் வசிக்கும் ராஜாமணி வீட்டின் கதவை உடைத்து ரூ.10 ஆயிரம் பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். அதேபகுதியைச் சோ்ந்த சிவகுரு வீட்டின் பின்பக்க கதவை மா்ம நபா்கள் உடைத்துள்ளனா். சத்தம் கேட்டு சிவகுரு எழுந்து சென்றபோது மா்ம நபா்கள் இருவா் தப்பியோடி விட்டனராம்.
இந்த சம்பவம் குறித்து புதுப்பேட்டை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பொறியாளா் வீட்டில் 5 பவுன் நகை, 5 கிலோ வெள்ளி திருட்டு
வீட்டின் பூட்டை உடைத்து ஆறரை பவுன் நகை திருட்டு

திருவள்ளூா் அருகே தொழிலாளி வீட்டில் நகை, ரொக்கம் திருட்டு
கோயில் பூட்டை உடைத்து நகை, உண்டியல் பணம் திருட்டு
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

