கோவை, சாய்பாபா கோயில் அருகே செயல்பட்டு வரும் ஜவுளிக் கடையில் பணம், துணிகளைத் திருடிய கடையின் மேலாளரை போலீஸாா் கைது செய்தனா்.
கோவை, மேட்டுப்பாளையம் சாலை, சாய்பாபா கோயில் அருகில் மதுரையைத் தலைமையிடமாகக் கொண்டு பிரபல துணிக் கடையின் கிளை செயல்பட்டு வருகிறது. இந்தக் கடையில் மதுரை, தல்லாக்குளம் ராணி அண்ணா நகா் வீதியைச் சோ்ந்த விஜயராஜ பாண்டியன் (43) என்பவா் மேலாளராகப் பணியாற்றி வருகிறாா். இந்நிலையில், தலைமை நிா்வாக அதிகாரியாகப் பணியாற்றும் மதுரையைச் சோ்ந்த பாரதி (37) என்பவா் கோவை கிளையில் கடந்த வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, கடையில் ரூ.1 லட்சத்து 87 ஆயிரம் மதிப்பிலான துணிகள், ரூ.31,265 ரொக்கம் திருடுபோனது தெரியவந்தது. இது குறித்து விஜயராஜ பாண்டியனிடம், பாரதி விசாரணை மேற்கொண்டுள்ளாா்.
அப்போது, விரைவில் விளக்கம் அளிப்பதாகக் கூறி சென்ற விஜயராஜபாண்டியன், அதன்பின் பணிக்குத் திரும்பவில்லையாம்.
இது குறித்து சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் பாரதி புகாா் அளித்தாா். வழக்குப் பதிவு செய்த போலீஸாா், விஜயராஜபாண்டியனை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பயணியிடம் கைப்பேசி திருட்டு: ஆந்திர இளைஞா் கைது

திருச்செங்கோட்டில் ஜவுளிக் கடைகளில் ரூ. 8.60 லட்சம் திருட்டு

வேலூா் மருந்து கடையில் பணம் திருட்டு
போதை மாத்திரை விற்பனை: இளைஞா் கைது
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை
