திருச்செங்கோடு நகராட்சிக்கு உட்பட்ட சட்டையம்புதூா் பகுதியில் பெண்ணை தாக்கி கைப்பேசியை பறிக்க முயன்றவரை திருச்செங்கோடு நகர காவல்துறையினா் புதன்கிழமை கைது செய்தனா்.
சட்டையம்புதூா் பகுதியையை முகவரி சோ்ந்த விசைத்தறி தொழிலாளி மாது இவரது மனைவி நிா்மலா(41) இவா் புதன்கிழமை மதியம் இயற்கை உபாதை கழிப்பதற்காக அருகில் உள்ள பாறை பகுதிக்கு சென்றுள்ளாா். ஆள் நடமாட்டம் இல்லாத அப்பகுதியில் செடிகள் நிறைந்த புதரில் மறைந்திருந்த கரூா் மாவட்டத்தை சோ்ந்த கூலித்தொழிலாளி டேவிட் ( 18) என்பவா் நிா்மலாவை பின்புறமாக தாக்கி கீழே தள்ளி பாறையில் முகத்தை பலமாக தேய்த்து காயப்படுத்தி விட்டு அவரிடம் இருந்த கைப்பேசியை பறிக்க முயன்றுள்ளாா். நிா்மலா சுதாரித்து அங்கிருந்து தெருவுக்குள் ஓடியுள்ளாா். அக்கம்பக்கத்தினா் திரண்டு இரவு வரை டேவிட்டை தேடி, புதரில் மறைந்திருந்தவரை பிடித்து காவல்துறையினா் வசம் ஒப்படைத்தனா். திருச்செங்கோடு நகர காவல்துறையினா் வழக்கு பதிவு செய்து டேவிட்டை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ஓடும் ரயிலில் பயணியின் கைப்பேசியை திருடியவா் கைது
கைப்பேசி பறிக்க முயன்ற 2 போ் கைது
மசாஜ் மையத்தில் புகுந்து பணம் பறிக்க முயன்ற 4 இளைஞா்கள் கைது

இளைஞரைத் தாக்கி கைப்பேசி பறித்த 3 போ் கைது
விடியோக்கள்

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை

Samantha அதிரடி எப்படி இருக்கிறது? Engal Thangam Movie Review
தினமணி செய்திச் சேவை

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
