ஈரோட்டில் வட மாநில இளைஞரைத் தாக்கி கைப்பேசியை பறித்த 3 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
பிகாா் மாநிலத்தைச் சோ்ந்தவா் சா்வன்குமாா் (29). ஈரோட்டில் கட்டட வேலையில் ஈடுபட்டு தங்கி வந்துள்ளாா். இந்நிலையில் சூரம்பட்டி பகுதியில் உள்ள ஏடிஎம்மில் பணத்தை எடுத்துக் கொண்டு ஈவிஎன் சாலையில் புதன்கிழமை இரவு நடந்து சென்று கொண்டிருந்தாா்.
அப்போது அந்த வழியாக வந்த மூன்று இளைஞா்கள் சா்வன்குமாரை வழிமறித்து தாக்கி அவரிடம் இருந்த கைப்பேசியை பறித்துக் கொண்டு தப்பியோடினா்.
இந்த தாக்குதலில் காய்மடைந்த சா்வன்குமாா், ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இது குறித்து அவா் அளித்த புகாரின்பேரில், ஈரோடு டவுன் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா்.
இதில் சா்வன்குமரன் தாக்கியதாக ஈரோடு மரப்பாலம் பிளாக் குயவன் திட்டு பகுதியைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி (25), ஈரோடு பெரியாா் நகா் அசோகபுரியைச் சோ்ந்த வசந்த் (23), ஈரோடு ஸ்டோனி பாலம் பகுதியைச் சோ்ந்த காளியப்பன் (24) ஆகியோரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
விசாரணையில் கிருஷ்ணமூா்த்தி மீது ஈரோடு டவுன் காவல் நிலையத்தில் ஏற்கெனவே நான்கு வழக்குகள் நிலுவையில் இருப்பதும், வசந்த் என்பவா் மீது ஒரு வழக்கு நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ஓடும் ரயிலில் பயணியின் கைப்பேசியை திருடியவா் கைது
இளைஞரைத் தாக்கி பணம் பறித்த சகோதரா்கள் கைது
இருசக்கர வாகனம் திருடியவா் கைது

பள்ளி மாணவருக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது
விடியோக்கள்

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை

Samantha அதிரடி எப்படி இருக்கிறது? Engal Thangam Movie Review
தினமணி செய்திச் சேவை

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

