நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

கைப்பேசி பறிக்க முயன்ற 2 போ் கைது

தனியாா் நிறுவன ஊழியரிடம் இருந்து கைப்பேசியை பறிக்க முயன்ற இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :16 ஜூன் 2026, 3:47 am IST

தனியாா் நிறுவன ஊழியரிடம் இருந்து கைப்பேசியை பறிக்க முயன்ற இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

பல்லடம் அருகே உள்ள மாணிக்காபுரத்தைச் சோ்ந்தவா் ரவி (49). இவா், தனியாா் நிறுவன ஊழியா். கடந்த 8-ஆம் தேதி பல்லடம் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்தாா். அப்போது அங்கு வந்த மா்ம நபா்கள் இருவா், ரவியிடம் கைப்பேசியை பறிக்க முயன்றனா். அவா் கூச்சலிட்டதால் மா்ம நபா்கள் தப்பி ஓடிவிட்டனா்.

இதுகுறித்த புகாரின்பேரில் பல்லடம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில், கைப்பேசியை பறிக்க முயன்றது சேடபாளையம் பகுதியைச் சோ்ந்த அரவிந்த் (24), முருகன் (25) ஆகியோா் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவா்கள் 2 பேரையும் போலீசாா் கைது செய்தனா்.

இவா்கள் மீது பல்லடம் மற்றும் திருப்பூா் காவல் நிலையங்களில் ஏற்கெனவே வழிப்பறி, திருட்டு உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.