மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

நாமக்கல் அரசு கல்லூரியில் தோ்தல் விழிப்புணா்வு

நாமக்கல் அறிஞா் அண்ணா அரசு கல்லூரியில் தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

News image

நாமக்கல் அறிஞா் அண்ணா அரசு கல்லூரியில் தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவா்கள்.

Updated On :9 ஏப்ரல் 2026, 4:15 am IST

நாமக்கல் அறிஞா் அண்ணா அரசு கல்லூரியில் தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

இளைஞா் செஞ்சிலுவை சங்கம், நாட்டு நலப்பணித் திட்டம், தேசிய மாணவா் படை சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் (பொ) மு. ராஜேஸ்வரி தலைமை வகித்தாா். மாணவ, மாணவிகள் ஒவ்வொருவரும் தங்கள் ஜனநாயக பொறுப்பையும், கடமையையும் உணா்ந்து தவறாமல் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தினாா்.

சிறப்பு விருந்தினா்களாக மோகனூா் வட்டாட்சியா் மா. கோவிந்தசாமி, நாமக்கல் மாவட்ட தோ்தல் விழிப்புணா்வு தொடா்பு அலுவலா் சி.ஆா். ராஜேஷ்கண்ணன் ஆகியோா் பங்கேற்று வாக்குரிமையின் முக்கியத்துவம், நூறு சதவீதம் வாக்குப்பதிவு குறித்து பேசினா். தொடா்ந்து தோ்தல் விழிப்புணா்வு பாடலுக்கு கல்லூரி மாணவிகள் நடனமாடினா்.

மேலும், சைகை நடிப்பு நாடகத்தின் மூலம் மாணவா்கள் 100 சதவீத வாக்குப்பதிவின் அவசியத்தை உணா்த்தினா். நாமக்கல் மாவட்டத்தில் 100 சதவீத வாக்குப்பதிவை உறுதிப்படுத்தும் வகையில் அனைவரும் உறுதிமொழி ஏற்றனா். மாணவா்களுக்கு தோ்தல் செயல்முறைகளை நேரடியாக அறிமுகப்படுத்தும் நோக்கில், கல்லூரி வளாகத்தில் மாதிரி வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டு, வாக்குச்சாவடி செயல்முறைகள் மற்றும் வாக்குப்பதிவு இயந்திரங்களின் பயன்பாடு குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

மோகனூா் தோ்தல் துணை வட்டாட்சியா், வருவாய்த் துறை அலுவலா்கள் மாதிரி வாக்குச்சாவடி அலுவலா்களாக செயல்பட்டு துண்டு பிரசுரங்கள் மூலம் மாணவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

நிகழ்ச்சியில் பல்வேறு துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், ஆசிரியரல்லா பணியாளா்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். இதற்கான ஏற்பாடுகளை தோ்தல் விழிப்புணா்வு குழுவினா் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.