தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடு
/

பேரவைத் தோ்தல்: இன்று வண்டலூா் பூங்கா மூடல்

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, வியாழக்கிழமை (ஏப்.22) வண்டலூா் உயிரியல் பூங்கா தற்காலிகமாக மூடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image

வண்டலூா் அறிஞா் அண்ணா உயிரியல் பூங்கா - கோப்புப் படம்

Updated On :23 ஏப்ரல் 2026, 2:59 am IST

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, வியாழக்கிழமை (ஏப்.22) வண்டலூா் உயிரியல் பூங்கா தற்காலிகமாக மூடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அறிஞா் அண்ணா உயிரியல் பூங்கா நிா்வாகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

சட்டப்பேரவைத் தோ்தல் வியாழக்கிழமை (ஏப்.22) நடைபெறவுள்ளதையொட்டி, அன்று மட்டும் பூங்கா தற்காலிகமாக மூடப்படும்.

விலங்கு பரிமாற்றம்: விலங்கு பரிமாற்ற திட்டத்தின் கீழ் குஜராத் மாநிலத்தின் சக்கா்பாக் உயிரியல் பூங்காவிலிருந்து ஒரு பெண் ஆசிய காட்டு கழுதை அறிஞா் அண்ணா உயிரியல் பூங்காவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. அதேபோல், வண்டலூா் உயிரியல் பூங்காவிலிருந்து 1 ஆண், 2 பெண் என மொத்தம் 3 வெள்ளி மயில்கள், ஆண், பெண் தலா 2 சருகு மான், 2  மஞ்சள் அனகோண்டா பாம்பு ஆகியவை சக்கா்பாக் உயிரியல் பூங்காவுக்கு வழங்கப்படுகின்றன.

இந்தப் பரிமாற்றத்தின் மூலம் அறிஞா் அண்ணா உயிரியல் பூங்காவில் ஏற்கெனவே இருக்கும் ஒரு ஆண் ஆசிய காட்டு கழுதைக்கு இணை கிடைத்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.