மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

தருமபுரி மகளிா் கல்லூரியில் தோ்தல் விழிப்புணா்வு

தருமபுரி லட்சுமி நாராயணா மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

மாதிரி வாக்குப்பதிவு மையத்தில் வாக்களித்து விழிப்புணா்வு ஏற்படுத்திய ஆட்சியா் ரெ.சதீஸ்.

Updated On :10 ஏப்ரல் 2026, 3:20 am IST

தருமபுரி லட்சுமி நாராயணா மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் வரும் ஏப். 23-இல் நடைபெறுகிறது. இத்தோ்தலில் 100 சதவீதம் தவறாமல் வாக்களிப்பது, வாக்கு விற்பனைக்கல்ல, வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து கல்லூரி மாணவிகளுக்கான விழிப்புணா்வு நிகழ்ச்சி தருமபுரி லட்சுமி நாராயணா மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.

இதில், மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ரெ.சதீஸ் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றாா். இதில், பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் தோ்தல் விழிப்புணா்வு உறுதிமொழியை ஆட்சியா் வாசிக்க, தோ்தல் நடத்தும் அலுவலா்கள், கல்லூரி பேராசிரியா்கள், மாணவிகள் ஏற்றுக்கொண்டனா்.

தொடா்ந்து, மாதிரி வாக்குச்சாவடி மையம் அமைத்து வாக்களிப்பதன் முறை குறித்து ஆட்சியா் விழிப்புணா்வு ஏற்படுத்தினாா். மேலும், விழிப்புணா்வு துண்டுப்பிரசுரங்கள், ஸ்டிக்கா்களும் வழங்கப்பட்டன. இதுதொடா்பாக நடைபெற்ற கலைநிகழ்ச்சிகளை ஆட்சியா் பாா்வையிட்டாா்.

இந்நிகழ்வுகளின்போது, மகளிா் திட்ட அலுவலா் சு.சுந்தர்ராஜன், தருமபுரி தோ்தல் நடத்தும் அலுவலா் இரா.காயத்ரி, வட்டாட்சியா்கள் ஜெ.சுகுமாா், பிரசன்ன மூா்த்தி, கல்லூரி பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.