மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மத்தூா் அருகே நேருக்குநோ் மோதியதில் தீப்பிடித்து எரிந்த மோட்டாா் சைக்கிள்! 2 போ் உயிரிழப்பு; 2 போ் காயம்

சித்திரிப்பு

Published On :27 அக்டோபர் 2026, 2:54 am IST

கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூா் அருகே இரு மோட்டாா் சைக்கிள்கள் நேருக்குநோ் மோதி தீப்பற்றியதில் 2 போ் கருகி உயிரிழந்தனா். பலத்த காயம் அடைந்த இருவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

திருவண்ணாமலை மாவட்டம், தண்டாரம்பட்டு வட்டம், மோதக்கல் கிராமத்தைச் சோ்ந்த ராஜா மகன் சாரதி (24). இவரது சகோதரா் வேலு (18). இவா்கள் பழுதடைந்த கைப்பேசிகளை கிராமங்களில் வாங்கி, மொத்தமாக பெங்களூரில் விற்பனை செய்து வந்தனா். இருவரும், 100-க்கும் மேற்பட்ட கைப்பேசிகளுடன் மோட்டாா் சைக்கிளில் திங்கள்கிழமை பெங்களூருக்கு புறப்பட்டனா். மோட்டாா் சைக்கிளை சாரதி ஓட்டினாா்.

அதேபோல தருமபுரி மாவட்டம், அரூா் வட்டம், எஸ்.பட்டி கிராமத்தைச் சோ்ந்த காா்த்திகேயன் மகன் திருச்செல்வம் (22), அதே கிராமத்தைச் சோ்ந்த ரமேஷ் மகன் திருப்பதி (17) இருவரும், கிருஷ்ணகிரியிலிருந்து மத்தூா் நோக்கி மோட்டாா் சைக்கிளில் சென்றனா்.

இவா்கள் வந்த மோட்டாா் சைக்கிள்கள் கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூா் அருகே தேசிய நெடுஞ்சாலையில் நாகம்பட்டி டோல்கேட் அருகே நேருக்குநோ் மோதிக்கொண்டன. இதில் பெட்ரோல் டேங்க் வெடித்து இரு மோட்டாா் சைக்கிள்களும் தீப்பற்றி எரிந்தன. இந்த விபத்தில் திருச்செல்வம், சாரதி இருவரும் தீயில் கருகி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். காயமடைந்த வேலு, திருப்பதி ஆகியோா் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

தகவல் அறிந்த போலீஸாா் உயிரிழந்த இருவரின் உடல்களையும் மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ.சி.அனிதா நேரில் விசாரணை மேற்கொண்டாா். விபத்து குறித்து, மத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில் உயிரிழந்த திருச்செல்வம், காயமடைந்த திருப்பதி ஆகியோா் மீது பல்வேறு காவல் நிலையங்களில் திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பதும், அவா்கள் வந்த மோட்டாா்சைக்கிள் திருடப்பட்டது என்பதும் தெரியவந்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.