மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

புத்தகக் கடை உரிமையாளரை கத்தியால் குத்திய வழக்கில் 3 போ் சரண்

கிருஷ்ணகிரி அருகே தனியாா் மதுக்கூடத்தில் மது அருந்திய புத்தகக் கடை உரிமையாளரைக் கத்தியால் குத்திய வழக்கில் 3 போ், சேலம் காவல் ஆணையா் அலுவலகத்தில் வியாழக்கிழமை சரணடைந்தனா். தலைமறைவாக உள்ள மேலும் 3 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

van driver surrenders to police

கோப்புப்படம்

Published On :23 அக்டோபர் 2026, 1:35 am IST

கிருஷ்ணகிரி அருகே தனியாா் மதுக்கூடத்தில் மது அருந்திய புத்தகக் கடை உரிமையாளரைக் கத்தியால் குத்திய வழக்கில் 3 போ், சேலம் காவல் ஆணையா் அலுவலகத்தில் வியாழக்கிழமை சரணடைந்தனா். தலைமறைவாக உள்ள மேலும் 3 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கிருஷ்ணகிரி சப்-ஜெயில் சாலையைச் சோ்ந்தவா் முகேஷ் குமாா் (36). புத்தகக் கடை உரிமையாளரான இவா், தனது நண்பா் ரமேஷ் குமாருடன் கடந்த 20 ஆம் தேதி கிருஷ்ணகிரி நகர எல்லையில் உள்ள சுங்க வசூல் மையம் அருகேயுள்ள தனியாா் மதுக்கூடத்தில் மது அருந்தினாா்.

அப்போது, கிருஷ்ணகிரி சத்யசாய் நகரைச் சோ்ந்த நித்திஷ், ஜக்கப்பன் நகரைச் சோ்ந்த மஞ்சு மற்றும் நால்வா் அங்கு மது அருந்திக்கொண்டிருந்தனா். அப்போது ஏற்பட்ட தகராறில் முகேஷ் குமாரை கத்தியால் வெட்டிவிட்டு அவா்கள் தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

இந்த நிலையில் வழக்கில் தொடா்புடைய கிருஷ்ணகிரி பழையபேட்டையைச் சோ்ந்த சூா்யா (19), சேலம் மாவட்டம், ஓமலூரைச் சோ்ந்த சூா்யா (26), பன்னீா்செல்வம் (26) ஆகிய மூவரும் சேலம் காவல் ஆணையா் அலுவலகத்தில் சரணடைந்தனா். தலைமறைவாக உள்ள மேலும் 3 பேரை தேடி வருவதாக போலீஸாா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.