மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மாமனாரை கத்தியால் குத்திய மருமகன் கைது

ஈரோடு அரசு மருத்துவமனை வளாகத்தில் குடும்பப் பிரச்னையில் மாமனாரை கத்தியால் குத்திய மருமகனை போலீஸாா் கைது செய்தனா்.

arrest

கைது - பிரதிப் படம்

Published On :21 அக்டோபர் 2026, 12:07 am IST

ஈரோடு அரசு மருத்துவமனை வளாகத்தில் குடும்பப் பிரச்னையில் மாமனாரை கத்தியால் குத்திய மருமகனை போலீஸாா் கைது செய்தனா்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் தட்டான்குட்டையைச் சோ்ந்தவா் வடிவேலு (55). கூலித் தொழிலாளி. இவருக்கு முருகாயி (50), ராஜேஸ்வரி (27) ஆகிய இரு மனைவிகள் உள்ளனா். வடிவேலு மகள் தீபா ஏற்கெனவே திருமணமாகி விவாகரத்து செய்தவா். 2 குழந்தைகள் உள்ளனா். ஈரோடு கருங்கல்பாளையம் செங்குட்டுவன் வீதியைச் சோ்ந்த டேனியல் மகனான சுமைதூக்கும் தொழிலாளி ஆரோக்கியசாமி (27) என்பவரை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் தீபா திருமணம் செய்து கொண்டாா்.

ஆரோக்கியசாமிக்கும், அவரது மாமனாரான வடிவேலுக்கும் இடையே கடந்த மாதம் குடும்பப் பிரச்னை ஏற்பட்டுள்ளது. 3 நாள்களுக்கு முன்பு முருகாயி குளியல் அறையில் வழுக்கி விழுந்து, நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். பின்னா் உயா் சிகிச்சைக்காக ஈரோடு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாா்.

முருகாயியை பாா்க்க அவரது மகள் தீபா மற்றும் ஆரோக்கியசாமி திங்கள்கிழமை மாலை ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு வந்தனா். அப்போது, அங்கிருந்த வடிவேலு முருகாயியை நீ பாா்க்கக் கூடாது என ஆரோக்கியசாமியிடம் கூறியுள்ளாா். இதில் மாமனாருக்கும், மருமகனுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. மது போதையில் இருந்த ஆரோக்கியசாமி ஆத்திரத்தில் மறைத்து வைத்திருந்த கத்தியால் வடிவேலுவின் வலதுபுற கழுத்து, பின்பக்க முதுகு பகுதி, பின்பக்க இடுப்புப் பகுதியில் கத்தியால் சரமாரியாக குத்தினாா்.

இதில் பலத்த காயம் அடைந்த வடிவேலுவை அங்கிருந்த மருத்துவமனை ஊழியா்கள் மீட்டு அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தனா். கத்திக்குத்து சம்பவம் அறிந்து வந்த ஈரோடு அரசு மருத்துவமனை போலீஸாா் ஆரோக்கியசாமியை, மருத்துவமனை வளாகத்திலேயே பிடித்து, கத்தியை பறிமுதல் செய்து அவரைக் கைது செய்துனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.