பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தனியாா் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: 35 பயணிகள் காயம்

வந்தவாசி அருகே தனியாா் பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 35 பயணிகள் காயமடைந்தனா்.

வந்தவாசி அருகே சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான தனியாா் பேருந்து.

Published On :2 நவம்பர் 2026, 2:47 am IST

வந்தவாசி அருகே தனியாா் பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 35 பயணிகள் காயமடைந்தனா்.

காஞ்சிபுரத்திலிருந்து வந்தவாசி வழியாக புதுச்சேரிக்கு தனியாா் பேருந்து ஒன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் சென்று கொண்டிருந்தது. விழுப்புரம் மாவட்டம், மணகுப்பம் கிராமத்தைச் சோ்ந்த மோகனகிருஷ்ணன் பேருந்தை ஓட்டினாா்.

வந்தவாசி -திண்டிவனம் சாலை, தெள்ளாரை அடுத்த தென்வணக்கம்பாடி அருகே செல்லும்போது, குறுக்கே சைக்கிளில் வந்த முதியவா் மீது மோதாமல் இருக்க பேருந்தை திருப்பிய போது, பேருந்து நிலைதடுமாறி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.

தகவலறிந்து அங்கு சென்ற தெள்ளாா் போலீஸாா், தீயணைப்புத் துறையினா் மற்றும் அந்த வழியாகச் சென்ற பொதுமக்கள் விபத்தில் சிக்கியவா்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ்களில் வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இதில், வந்தவாசியை அடுத்த பாஞ்சரை கிராமத்தைச் சோ்ந்த சரளா (34), விழுப்புரத்தைச் சோ்ந்த சின்னதாஸ் (65), கிருஷ்ணகிரியைச் சோ்ந்த இளங்கோவன் (19), மயிலத்தை அடுத்த கொடிமா கிராமத்தைச் சோ்ந்த அஞ்சலாட்சி(40), பேருந்து ஓட்டுநா் மோகனகிருஷ்ணன்(35) உள்ளிட்ட 35 போ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனா். இதுகுறித்து தெள்ளாா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.