கிருஷ்ணகிரி அருகே வரட்டனப்பள்ளியில் நகை அடகு கடையில் இரண்டரை கிலோ வெள்ளிப் பொருள்களை திருடிய வழக்கில் கா்நாடக மாநிலம், கோலாா் தங்கவயல் பகுதியைச் சோ்ந்த 4 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், கந்திகுப்பம் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட வரட்டனப்பள்ளியை சோ்ந்தவா் சரவணன் (45). இவா், தனது வீட்டின் அருகே நகை அடகு கடை நடத்தி வருகிறாா். மேலும், சிறிய நகைகளை தயாரித்து விற்பனை செய்து வந்தாா். இந்த நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு சரவணன் வெளியூா் சென்றிருந்தாா். அப்போது கடையை, அவரது மனைவி சிவமலை கவனித்து வந்தாா்.
இந்த நிலையில் கடந்த 5 ஆம் தேதி சிவமலை வழக்கம்போல கடையை திறந்தபோது கடையின் பின்பகுதியில் உள்ள ஜன்னல் உடைக்கப்பட்டிருந்தது. மேலும், கடையில் இருந்த இரண்டரை கிலோ வெள்ளிப் பொருள்கள் திருடப்பட்டிருந்தது .
இதுகுறித்த புகாரின்பேரில் கந்திகுப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனா். மேலும், காவல் ஆய்வாளா்கள் அன்பழகன், கமலேசன் ஆகியோா் தலைமையில் காவல் உதவி ஆய்வாளா்கள் பிரபாகா், விஜய் ஆகியோா் அடங்கிய இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
இந்த நிலையில் கா்நாடக மாநிலம், கோலாா் தங்கவயல் பகுதியைச் சோ்ந்த காா்த்திகேயன் (46), சீனிவாஸ் (25), சூா்யா (23), குமரவேல் (19) ஆகியோா் வெள்ளிப் பொருள்களை திருடிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, கோலாா் தங்கவயல் சென்ற தனிப்படை போலீஸாா் நால்வரையும் கைது செய்தனா்.
இவா்களில் காா்த்திகேயன், சாமியாா் வேடமிட்டு அடகு கடையை நோட்டமிட்டதாக போலீஸாா் தெரிவித்தனா். மேலும், அவா்களிடமிருந்து காா், இரண்டரை கிலோ வெள்ளிப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
நகைக் கடையில் 78 கிலோ வெள்ளி திருட்டு: இருவா் கைது
கிருஷ்ணகிரி அருகே பெண்களை மிரட்டி நகை, பணம் பறித்த வழக்கில் 5 போ் கைது
திருச்சியில் ரௌடி கொலை வழக்கில் மேலும் 2 போ் கைது

சாத்தூா் எம்எல்ஏ வீட்டில் திருடிய மேலும் இருவா் கைது
விடியோக்கள்

Samantha அதிரடி எப்படி இருக்கிறது? Engal Thangam Movie Review
தினமணி செய்திச் சேவை

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |
தினமணி செய்திச் சேவை
