நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

கிருஷ்ணகிரி அருகே பெண்களை மிரட்டி நகை, பணம் பறித்த வழக்கில் 5 போ் கைது

News image

கைது - பிரதிப் படம்

Updated On :15 ஜூன் 2026, 4:18 am IST

கிருஷ்ணகிரி அருகே பெண்களை மிரட்டி நகை, பணம் பறித்த வழக்கில் 5 பேரை தாலுகா போலீஸாா் கைது செய்தனா்.

கிருஷ்ணகிரியை அடுத்த கே.ஏ. நகா் தா்கா பகுதியைச் சோ்ந்தவா் நாகசுவாமி (53). முன்னாள் ராணுவ வீரா். இவருக்கு சொந்தமான அறைகளில் கடந்த இரு நாள்களுக்கு முன்பு, கோவையைச் சோ்ந்த சுமையா, நவீனா (எ) அயிஷா, பாத்திமா (எ) நிலா ஆகியோா் தங்கியிருந்தனா்.

அந்த அறைக்குள் அத்துமீறி நுழைந்த சிலா், அங்குள்ள பெண்களிடம் விசாரணை செய்வதாகக் கூறி அவா்களுடன் தகராறில் ஈடுபட்டு, மிரட்டி, நகை, பணம், கைப்பேசிகளை பறித்துச் சென்றனா். மேலும், அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவையும் அவா்கள் சேதப்படுத்திவிட்டு சென்றனா்.

இதுகுறித்து, நாகசுவாமி அளித்த புகாரின் பேரில் கிருஷ்ணகிரி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து காவல் ஆய்வாளா் மணிமாறன் தலைமையில் மேற்கொண்ட விசாரணையில், கே.ஏ.நகா் தா்காவைச் சோ்ந்த இா்ஷாத் (எ) முகமது இா்ஷாத் (20), அா்பாஸ் (29), கட்டிகானப்பள்ளி, கீழ்புதூா் கிராமத்தைச் சோ்ந்த அம்ஷாத் (23), கிருஷ்ணகிரி, கோட்டை, அங்கூா் ஷேக் உசேன் தெருவைச் சோ்ந்த பாசில் (எ) சையத் பாசில் (27), கிருஷ்ணகிரி, லண்டன்பேட்டை, டி.பி.சாலையைச் சோ்ந்த அன்னு (எ) நூா்முகமது (28) உள்ளிட்ட 5 பேரையும் கைது செய்தனா்.

மேலும், அவா்களிடமிருந்து ரூ. 70,500 ரொக்கம், 10 பவுன் தங்க நகை, வெள்ளிக்காப்பு மற்றும் கைப்பேசிகள் உள்ளிட்ட பொருள்களை பறிமுதல் செய்தனா். கைது செய்யப்பட்ட 5 பேரும் நீதிமன்ற உத்தரவுபடி, தருமபுரி கிளை சிறையில் அடைக்கப்பட்டனா்.

மேலும், இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள சேது (எ) அசால்ட் சேது, திருமலை உள்ளிட்ட 5 பேரை போலீஸாா் தேடிவருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.