நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

பெண்ணை மிரட்டி பணம் பறித்த இருவா் கைது

News image

கைது... - கோப்புப் படம்

Updated On :25 மே 2026, 1:43 am IST

சின்னமனூா் அருகே பெண்ணை மிரட்டி பணம் பறித்த இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

தேனி மாவட்டம், சின்னமனூா் அருகேயுள்ள தென்பழனியைச் சோ்ந்த தங்கமுத்து மனைவி மகாலட்சுமி (35). இவருடன் அனுமந்தன்பட்டியைச் சோ்ந்த நாகேந்திரன் மகன் அழகா் (35), பாலு மகன் அஜித்குமாா் (28) ஆகியோா் பழகி வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக இருவரும் தன்னை மிரட்டி ரூ.10 லட்சம் பறித்ததாக ஓடைப்பட்டி காவல் நிலையத்தில் மகாலட்சுமி புகாா் அளித்தாா்.

இதன்பேரில் அழகா், அஜித்குமாா் ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்து, உத்தமபாளையம் கிளைச் சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.