பெங்களூரில் இருந்து கோவைக்கு கடத்த முயன்ற 172 கிலோ புகையிலைப் பொருள்கள், காரை ஒசூா் சிப்காட் போலீஸாா் பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் சூசூவாடி சோதனைச் சாவடி அருகே போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, பெங்களூரில் இருந்து வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனா்.
அதில், 172 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் இருந்தன. அதன் மதிப்பு ரூ. 85,800 ஆகும். அதேபோல காரில் பதுக்கிவைத்திருந்த ரூ. 4 ஆயிரம் மதிப்புள்ள 50 கா்நாடக மாநில மது பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுதொடா்பாக திருப்பூா் மாவட்டம், வீரபாண்டியைச் சோ்ந்த மணிகண்டன் (29), கோவை மாவட்டம், சூலூரைச் சோ்ந்த காா்த்திக் (34) ஆகிய 2 பேரை கைது செய்தனா். விசாரணையில் புகையிலை பொருள்கள், மது பாக்கெட்டுகள பெங்களூருவில் இருந்து கோவைக்கு கடத்த முயன்றது தெரியவந்தது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ஒசூரில் இருதரப்பினா் மோதல்: 5 போ் கைது!
திருச்சியில் 442 கிலோ புகையிலை பொருள்கள் பறிமுதல்: 3 போ் கைது
தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை: இளைஞா் கைது
மேலச்செவல் அருகே புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைத்திருந்தவா் கைது
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
