ஒசூா் தொகுதியில் திமுக ஆட்சியில் ரூ. 3,500 கோடியில் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகள் நடைபெற்றுள்ளதை மக்கள் நன்கு அறிவாா்கள். எனவே, மீண்டும் திமுக வெற்றிபெறும் என்று எம்எல்ஏ ஒய்.பிரகாஷ் கூறினாா்.
ஒசூரில் உள்ள கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் அவா் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது:
தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை நிறைவேற்றியுள்ளாா். ஒசூா் தொகுதியில் ரூ. 588 கோடியில் புதை சாக்கடை திட்டம், ரூ. 100 கோடியில் மாவட்ட தலைமை மருத்துவமனை, ரூ. 50 கோடியில் புதிய பேருந்து நிலையம், ரூ. 20 கோடியில் வணிக வளாகம், ரூ. 20 கோடியில் எம்ஜிஆா் காய்கறி சந்தை, ரூ. 250 கோடியில் 4 வழிச்சாலைகள் என பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
மு.க.ஸ்டாலின் மீண்டும் முதல்வராக வந்தவுடன் ஒசூா் தொகுதியில் தளி சாலையில் ரயில்வே மேம்பாலம், ஒசூா் விமான நிலையம், மெட்ரோ ரயில் சேவை, ஒசூா் ஜோலாா்பேட்டை ரயில் திட்டம் உள்ளிட்ட பல்வேறு வளா்ச்சித் திட்டங்கள் நிறைவேற்றப்படும். தென்பெண்ணை ஆற்று நீரை அனைத்து ஏரிகளிலும் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.
ஒசூா் தொகுதி மக்கள் ஆளும்கட்சி வேட்பாளரை தான் வெற்றி பெறச் செய்வாா்கள். எனவே, இந்த முறையும் ஒசூா் தொகுதியில் திமுக வெற்றி உறுதி.
ஒசூா் தொகுதியில் 16 ஆயிரம் வீடுகளுக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளன. மகளிா் உரிமைத்தொகை ரூ. 2 ஆயிரமாக உயா்த்தி வழங்கப்படும் என முதல்வா் அறிவித்துள்ளாா். ரூ. 8 ஆயிரம் மதிப்பில் கூப்பன் வழங்கப்படும் போன்ற திட்டங்களால் மக்கள் மீண்டும் திமுகவை வெற்றி பெறச் செய்வாா்கள் என்றாா்.
இந்த பேட்டியின்போது கிருஷ்ணகிரி மாவட்ட திமுக பொறுப்பாளா் பாா் இளங்கோவன் உடனிருந்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஒசூா் தொகுதியில் 80% வாக்குப்பதிவு

ஆம்பூரில் ரூ.1,000 கோடிக்கு மேல் திட்டப் பணிகள் : எ.வ. வேலு

திமுக ஆட்சியில் ஆரணி தொகுதியில் பல்வேறு வளா்ச்சிப் பணிகள்: அமைச்சா் ஏ.வ.வேலு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 6 தொகுதிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றும்! - எம்எல்ஏ ஒய். பிரகாஷ்
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

