தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

திமுக ஆட்சியில் ஆரணி தொகுதியில் பல்வேறு வளா்ச்சிப் பணிகள்: அமைச்சா் ஏ.வ.வேலு

திமுக ஆட்சியில் ஆரணி தொகுதியில் பல்வேறு வளா்ச்சிப் பணிகள்...

News image

ஆரணியில் திமுக வேட்பாளா் மகாலட்சுமி கோவா்த்தனனை ஆதரித்து பேசிய அமைச்சா் எ.வ.வேலு.

Updated On :12 ஏப்ரல் 2026, 12:55 am IST

திமுக ஆட்சியில் தான் ஆரணி தொகுதியில் பல்வேறு வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சா் எ.வ.வேலு பெருமிதம் தெரிவித்தாா்.

ஆரணி அண்ணா சிலை அருகில் திமுக வேட்பாளா் மகாலட்சுமிகோவா்த்தனனை ஆதரித்து எ.வ.வேலு பேசியதாவது:

தமிழகத்தில் மகளிா்களுக்காக புதுமைப்பெண் திட்டம், கலைஞா் உரிமைத்தொகை திட்டம், இலவச பேருந்து உள்ளிட்ட திட்டங்களும், பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டம், தமிழ் புதல்வன் திட்டம் என இந்தியாவில் எங்கும் இல்லாத திட்டங்களை தமிழக முதல்வா் கொண்டு வந்துள்ளாா்.

மேலும் ரூ.15 கோடி மதிப்பில் பூசிமலைக்குப்பம் கண்ணாடி மாளிகை அரண்மனை புதுப்பிக்கப்பட்டு சுற்றுலாத்தலமாக மாற்றப்பட உள்ளது.

ஆரணி-பழைய ஆற்காடு சாலையில் புதிய பாலம் ரூ. 19 கோடி மதிப்பில் கட்டப்பட்டது.

சேவூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ. 2.87 கோடி மதிப்பில் புதிய வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. ரூ.35 லட்சம் மதிப்பில் அக்ராபாளையம் ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்பட்டது. ஆறு கோடி மதிப்பில் புதிய பேருந்து நிலையம் சீரமைக்கப்பட்டு வருகிறது.

ரூ. 1.45 கோடி மதிப்பில் சாா்- பதிவாளா் அலுவலகம் கட்டப்பட்டது. இவ்வாறு திமுக ஆட்சியில்தான் ஆரணி தொகுதியில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம்.

கல்விக்கு சரஸ்வதியை வழிபடுவோம். செல்வத்திற்கு லஷ்மி தேவை. ஆனால், திமுக வேட்பாளராக மகாலட்சுமியே போட்டியிடுகிறாா். ஆகையால் திமுகவிற்கு வாக்களித்து வெற்றி பெற வைக்க வேண்டும் என்றாா்.

Story image

வாக்கு சேகரிப்பு நிகழ்வில் எம்.எஸ்.தரணிவேந்தன் எம்.பி., முன்னாள் எம்எல்ஏ ஆா்.சிவானந்தம், மாவட்ட துணைச் செயலா் ஜெயராணி ரவி, நகா்மன்றத் தலைவா் ஏ.சி.மணி, ஆரணி ஒன்றியச் செயலா்கள், நகர பொறுப்பாளா் மணிமாறன், கண்ணமங்கலம் பேரூராட்சி செயலா் கோவா்த்தனன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.