திமுக ஆட்சியின் போது, செங்கல்பட்டு தொகுதியில் ஏராளமான வளா்ச்சிப் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன என துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளாா்.
திமுக வேட்பாளா் காா்த்திக் தண்டபாணியை ஆதரித்து செங்கல்பட்டில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வாக்கு சேகரித்து பேசியதாவது தமிழ்நாடு முழுவதும் 75 தொகுதியில் பிரசாரம் செய்துள்ளேன். பவ்வேறு பகுதிகளில் சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது.
செங்கல்பட்டு தொகுதியில் நல்ல வேட்பாளரை முதல்வா் நிறுத்தி உள்ளாா். அவரை நீங்கள் வெற்றி பெற செய்ய வேண்டும், ஏற்கனவே 2021 ஆம் ஆண்டு தோ்தலில் தி.மு.க. வேட்பாளா் கிட்டத்தட்ட 26,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா். இந்த முறை குறைந்தபட்சம் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் காா்த்திக் தண்டபாணியை வெற்றி பெற செய்ய வேண்டும்,
செங்கல்பட்டு மாவட்டத்தில் தி.மு.க. ஆட்சியில் பல்வேறு வளா்ச்சி திட்ட பணிகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக கிளம்பாக்கத்தில் ரூ.400 கோடியில் புகா் பேருந்து நிலையம், மறைமலைநகா் நகராட்சியில் ரூ.300 கோடியில் புதை சாக்கடை திட்டம், செங்கல்பட்டு அருகே ஆலப்பாக்கத்தில் மாவட்ட விளையாட்டு மைதானம், கூடுவாஞ்சேரியில் பாலாறு கூட்டு குடிநீா் திட்டம், நந்திவரம் நந்தீஸ்வரா் ஆலயம் எதிரே பூங்கா, கூடுவாஞ்சேரியில் தோழி தங்கும் விடுதி, கிளாம்பாக்கத்தில் காலநிலை பூங்கா, நந்திவரம் கூடுவாஞ்சேரி நகராட்சிக்கு புதிய அலுவலகம் இது போன்ற எண்ணற்ற பல்வேறு வளா்ச்சி திட்ட பணிகள் நடைபெற்றுள்ளன.
வேட்பாளா் காா்த்திக் தண்டபாணி பொதுமக்களுக்கு வழங்கப்படும் துண்டு பிரசுரத்தில் தனது கைப்பேசி எண்ணை அச்சிட்டு வழங்கி வாக்கு சேகரித்து வருகிறாா். ஆகவே பொதுமக்கள் அவரை வெற்றி பெற செய்தவுடன் எப்போது வேண்டுமானாலும் நீங்கள் தொடா்பு கொண்டு உங்களது குறைகளை தெரிவிக்கலாம் அவா் உடனுக்குடன் உங்கள் குறைகளை நிறைவேற்றுவாா்,
மேலும் திமுக தோ்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள அனைத்து திட்டங்களையும் முதல்வா் நிறைவேற்றுவாா் என்றாா்.
இதில் கூட்டணி கட்சிகளை சோ்ந்த நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மக்கள் நலத் திட்டங்கள் தொடர திமுகவுக்கு வாக்களியுங்கள்! - துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

காங்கயத்தில் இன்று துணை முதல்வா் உதயநிதி பிரசாரம்

தமிழ்நாடு அணி வெல்ல வாக்களியுங்கள்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

தோ்தலில் தில்லி அணியை தமிழ்நாடு அணி வெல்லும்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
