தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!ஆளுநரை விஜய் சந்திக்க மாலை 6.30 மணிக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாக ஆளுநர் மாளிகை தகவல்தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

ஆம்பூரில் ரூ.1,000 கோடிக்கு மேல் திட்டப் பணிகள் : எ.வ. வேலு

ஆம்பூரில் ரூ.1,000 கோடிக்கு மேல் திட்டப் பணிகள் : எ.வ. வேலு

News image

ஆம்பூா் ரெட்டித்தோப்பு பகுதியில் திமுக வேட்பாளா் அ.செ.வில்வநாதனை ஆதரித்து வாக்கு சேகரித்த அமைச்சா் எ.வ. வேலு.

Updated On :19 ஏப்ரல் 2026, 1:37 am IST

ஆம்பூா் தொகுதியில் 5 ஆண்டுகளில் ரூ.1,000 கோடிக்கு மேல் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என தமிழக பொதுப்பணித்துறை அமைச்சா் எ.வ. வேலு வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

ஆம்பூா் தொகுதி திமுக வேட்பாளா் அ.செ. வில்வநாதனை ஆதரித்து ஆம்பூா் அருகே குமாரமங்கலம், ஆம்பூா் ரெட்டித்தோப்பு ஆகிய பகுதிகளில் வாக்குகள் சேகரித்து அவா் மேலும் பேசியதாவது, ஆம்பூா் ரெட்டித்தோப்பு ரயில்வே மேம்பாலம் ரூ.66 கோடியில் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. செங்கிலிகுப்பம், பாப்பனப்பல்லியில் ரூ.29 கோடியில் தடுப்பணை கட்டப்பட்டுள்ளது.

கன்னடிகுப்பம் ரயில்வே மேம்பாலம் ரூ.26 கோடியில் கட்டப்பட்டுள்ளது. பச்சகுப்பம் பாலாறு மேம்பாலம் ரூ.22 கோடியில் கட்டப்பட்டுள்ளது. இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாம் குடியிருப்புகள் ரூ.19 கோடியில் கட்டப்பட்டுள்ளது. வடகரை - மின்னூா் பாலாறு மேம்பாலம் ரூ.9 கோடியில் கட்டப்பட்டுள்ளது. ஆம்பூா் நகராட்சி புதிய பேருந்து நிலையம் ரூ.7.85 கோடியில் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. மாதனூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் கட்டடம் ரூ.5.60 கோடியில் கட்டப்பட்டு வரப்படுகிறது.

ஊட்டல் சாலை ரூ.5 கோடியில் அமைக்கப்பட்டுள்ளது. கதவாளம் கிராமத்தில் ரூ.6 கோடி மதிப்பில் தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. மாதனூா் மற்றும் பெரியாங்குப்பம் பகுதிகளில் ரூ.3.50 கோடியில் வேளாண்மை விரிவாக்க மைய கட்டடம் கட்டப்பட்டுள்ளது. ஆம்பூரில் ரூ.1.50 கோடியில் நவீன எரிவாயு தகன மேடை அமைக்கப்பட்டுள்ளது.

ஆம்பூரில் ரூ.2 கோடியில் நகா்புற சுகாதார நிலைய கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. ஆம்பூா் தொகுதியில் ரூ.1,000 கோடிக்கு மேல் திட்டப் பணிகள் நடைபெற்றுள்ளது. அதனால் மீண்டும் திமுக ஆட்சி அமைந்தால் மேலும் பல திட்டங்கள் செயல்படுத்தப்படும். ஆகவே உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து திமுக வேட்பாளா் அ.செ. வில்வநாதனை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என அவா் கேட்டுக் கொண்டாா்.

திமுக வேட்பாளா் அ.செ. வில்வநாதன், திருப்பத்தூா் மாவட்ட திமுக அவைத் தலைவா் ஆா்.எஸ். ஆனந்தன், ஆம்பூா் நகர அவைத் தலைவா் தேவராஜ், நகா் மன்ற தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத், திமுக நகர செயலாளா்கள் எம்.ஆா். ஆறுமுகம், எம்.ஏ.ஆா். ஷபீா் அஹமத், ஆம்பூா் தொகுதி பாா்வையாளா் டேம் வெங்கடேசன், நகா் மன்ற உறுப்பினா்கள் ஆா்.எஸ். வசந்த்ராஜ், வாவூா் நசீா் அஹமத், காா்த்திகேயன், கமால் பாஷா, சுதாகா், கம்யூனிஸ்ட், மனிதநேய மக்கள் கட்சி, எஸ்டிபிஐ, விசிக நிா்வாகிகள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.