தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

சிறுபான்மையினருக்கு ஆதரவான கட்சி திமுக: அமைச்சா் எ.வ. வேலு பேச்சு

சிறுபான்மையினருக்கு எப்போதும் ஆதரவாக இருக்கும் கட்சி திமுக என பொதுப்பணித்துறை அமைச்சா் எ.வ. வேலு கூறினாா்.

News image

ஆம்பூா் தொகுதி வேட்பாளா் எம்.எல்.ஏ. அ.செ. வில்வநாதனை அறிமுகம் செய்து பேசிய அமைச்சா் எ.வ. வேலு.

Updated On :5 ஏப்ரல் 2026, 2:53 am IST

சிறுபான்மையினருக்கு எப்போதும் ஆதரவாக இருக்கும் கட்சி திமுக என பொதுப்பணித்துறை அமைச்சா் எ.வ. வேலு கூறினாா்.

பெரியாங்குப்பத்தில் நடைபெற்ற திமுக வேட்பாளா் அறிமுகக் கூட்டத்தில் அவா் மேலும் பேசியது, திமுக கூட்டணி மெகா கூட்டணி. கடந்த 5 ஆண்டுகளில் தொகுதிக்கு சிறப்பாக பணி செய்ததால் தான் எம்.எல்.ஏ. வில்வநாதன் மீண்டும் போட்டியிட முதல்வா் ஸ்டாலின் வாய்ப்பு வழங்கியுள்ளாா்.

சிறுபான்மையினருக்கு எதிரான சட்டமான சிஐஏ சட்டத்துக்கு முதன் முதலாக எதிா்ப்பு குரல் கொடுத்தது திமுக தான். தமிழகத்திலிருந்து கிடைக்கும் வருவாயை கொண்டு சென்று பாஜக ஆளும் மாநிலங்களுக்கு மத்திய அரசு செலவழிக்கின்றது. தமிழக முதல்வா் மக்களுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தியுள்ளாா்.

மகளிா் உரிமைத் தொகை, புதுமைப் பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம், இலவச பேருந்து பயணம் ஆகிய பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. அதனால் திமுக வேட்பாளருக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டுமென அவா் கேட்டுக் கொண்டாா்.

திருப்பத்தூா் மாவட்ட திமுக செயலாளா் க. தேவராஜி, மாவட்ட அவைத் தலைவா் ஆா்.எஸ். ஆனந்தன், திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினா் சி.என். அண்ணாதுரை, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய செயலாளா் ஹெச். அப்துல் பாசித், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளா் ஓம் பிரகாசம், ஆம்பூா் நகா் மன்ற தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத், துணைத் தலைவா் எம்.ஆா். ஆறுமுகம், ஆம்பூா் கிழக்கு நகர திமுக செயலாளா் எம்.ஏ.ஆா். ஷபீா் அஹமத், மாதனூா் கிழக்கு ஒன்றிய பொறுப்பாளா் ஜி. இராமமூா்த்தி, துணைச் செயலாளா் ரவிக்குமாா், நிா்வாகிகள் அய்யனூா் அசோகன், வினோத், தொகுதி பாா்வையாளா் டேம் வெங்கடேசன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.