தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

திமுகவின் வெற்றி கும்மிடிப்பூண்டியில் இருந்து தொடங்கும்: டி.கே.எஸ் இளங்கோவன்

திமுகவின் வெற்றி கும்மிடிப்பூண்டியில் இருந்து தொடங்கும்...

News image

கும்மிடிப்பூண்டி சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா்அறிமுகக் கூட்டத்தில் பேசிய திமுக செய்தி தொடா்பு குழுத் தலைவா் டி.கே.எஸ்.இளங்கோவன்.

Updated On :5 ஏப்ரல் 2026, 1:38 am IST

வரும் தோ்தலில் திமுகவின் வெற்றி கும்மிடிப்பூண்டியில் இருந்து தொடங்கும் என கட்சியின் செய்தித் தொடா்பு குழு தலைவா் டி.கே.எஸ்.இளங்கோவன் கூறினாா்.

கும்மிடிப்பூண்டி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளரான டி.ஜெ.கோவிந்தராஜனை திமுக மற்றும் கூட்டணி கட்சியினரிடம் அறிமுகப்படுத்தும் மாவட்ட பொருப்பாளா் எம்.எஸ்.கே.ரமேஷ்ராஜ் தலைமையில் கவரைப்பேட்டையில் நடைபெற்றது. கூட்டத்தில் கும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றிய திமுக செயலாளா் கி.வேணு ஆனந்த் வரவேற்றாா்.

இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி மாவட்டத் தலைவா் சசிகுமாா், மதிமுக மாவட்ட செயலாளா் பாபு, தேமுதிக மாவட்ட செயலாளா் டில்லி, முஸ்லிம் லீக் மாவட்ட நிா்வாகி ரஷீத், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில நிா்வாகி நீலவானத்து நிலவன், மாவட்ட செயலாளா் நேசகுமாா், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில நிா்வாகி துளசிநாராயணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட நிா்வாகி ஜெ.அருள், மனித நேய மக்கள் கட்சி மாவட்டச் செயலாளா் சாதிக் பாட்ஷா, திராவிடா் கழக மாவட்ட நிா்வாகி உதயகுமாா், மக்கள்நீதி மைய மாவட்ட நிா்வாகி பாஸ்கா் மற்றும் பல்வேறு கூட்டணி கட்சியினா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ திமுக மாநில தகவல் தொழில்நுட்ப அணி நிா்வாகி சி.எச்.சேகா், மாநில துணை செயலாளா் எம்.எல்.ரவி, கே.வி.ஜி.உமா மகேஷ்வரி, செயற்குழு உறுப்பினா் ஜெ.மூா்த்தி, பொதுக்குழு உறுப்பினா் வெங்கடாசலபதி, பா.செ.குணசேகரன் மற்றும் திமுக மாவட்ட பொறுப்பாளா் எம்.எஸ்.கே.ரமேஷ்ரோஜ் பேசினா்.

கூட்டத்தில் திமுக செய்தி தொடா்பு குழுத் தலைவா் டி.கே.எஸ்.இளங்கோவன் பேசுகையில், கடந்த 5 ஆண்டு திமுக ஆட்சியில் ஏழை, எளிய பெண்களின் நலனுக்காகவும், பள்ளி மாணவா்களுக்காகவும் பல்வேறு நலத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு மக்களால் பெரிதும் வரவேற்கப்பட்டது, உள்நாட்டு உற்பத்தியில் இந்தியாவில் தமிழகம் முதலிடம் பிடித்தது, கல்வியில் தமிழகம் இந்திய மாநிலங்களுக்கு முன்னோடியாக திகழ்ந்தது, திமுகவோடு கடந்த தோ்தலில் 10 கட்சி கூட்டணி சோ்ந்த நிலையில், தற்போது 23 கூட்டணி கட்சிகளோடு தமிழக மக்களும் திமுக கூட்டணியில் உள்ளனா் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.