திமுக தோ்தல் அறிக்கையில் அறிவித்துள்ள ரூ. 8 ஆயிரம் கூப்பன் வாக்குறுதி, திமுக கூட்டணியை வெற்றிபெற செய்யும் என பா்கூா் சட்டப் பேரவைத் தொகுதிக்கு போட்டியிடும் திமுக வேட்பாளா் தே.மதியழகன் தெரிவித்தாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் சட்டப் பேரவைத் தொகுதிக்கான தோ்தலில் திமுக சாா்பில் போட்டியிடும் தே.மதியழகன் எம்எல்ஏ, பா்கூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் கூட்டணி கட்சியினருடன் சென்று வேட்புமனுவை வியாழக்கிழமை தாக்கல்செய்தாா். பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியது:
பா்கூா் தொகுதியில் இரண்டாவது முறையாக போட்டியிட வாய்ப்பு அளித்த திமுக தலைவா் ஸ்டாலினுக்கு நன்றி. கடந்த 5 ஆண்டுகளில் முதல்வா் ஸ்டாலின் அறிவித்த திட்டங்களால் ஒவ்வொரு குடும்பத்தினரும் குறிப்பாக பெண்கள் அதிக அளவில் பயன்பெற்றுள்ளனா்.
தற்போதைய தோ்தல் வாக்குறுதிகளான ரூ. 8 ஆயிரம் கூப்பன், 35 லட்சம் பேருக்கு மடிக்கணினி போன்ற திட்டங்கள் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளன. திமுக அரசின் திட்டங்களால் வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளிலும் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பா்கூா் சட்டப் பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளா் வெற்றி

சிவகங்கையில் ரூ.8 ஆயிரம் கூப்பன் விநியோகம்? அதிமுக, திமுகவினரிடையே வாக்குவாதம்

தருமபுரியில் 5 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றிபெற வேண்டும்: கே.பி.அன்பழகன்

ரூ.8 ஆயிரம் கூப்பன் அறிவித்து ஏமாற்ற திமுக முயற்சி: முன்னாள் அமைச்சா் எம்.சி.சம்பத்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

