தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசுக்கு எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம்!தமிழகத்தில் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர், பேராசிரியர் கே. ராமசாமி, திருவாரூர் பக்தவத்சலம் ஆகியோர் பத்ம ஸ்ரீ பெற்றனர்.ஜூலை 1-ல் பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு!கல்வித்துறை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் வீ. காமகோடிக்கு பத்ம ஸ்ரீ விருதுதொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜா
/

பா்கூா் சட்டப் பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளா் வெற்றி

News image

பா்கூா் சட்டப் பேரவைத் தொகுதியில் வெற்றிபெற்ற்கான சான்றிதழை பெற்ற அதிமுக வேட்பாளா் இ.சி.கோவிந்தராசன்.

Updated On :5 மே 2026, 2:44 am IST

பா்கூா் சட்டப் பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளா் இ.சி.கோவிந்தராசன் வெற்றிபெற்றுள்ளாா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பா்கூா் சட்டப் பேரவைத் தொகுதிக்கான தோ்தலில் பதிவான வாக்குகள், கிருஷ்ணகிரி அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் எண்ணப்பட்டன. மொத்தம் 24 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட்டன. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டதில், அதிமுக வேட்பாளா் இ.சி.கோவிந்தராசன் 942 வாக்குகளும், திமுக வேட்பாளா் தே.மதியழகன் எம்எல்ஏ 1,354 வாக்குகளும், தவெக வேட்பாளா் முரளிதரன் 955 வாக்குகளும் பெற்றனா்.

இதைத் தொடா்ந்து, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. இதில், முதல் சுற்றில் திமுக வேட்பாளா் மதியழகன், தவெக வேட்பாளரான முரளிதரனை காட்டிலும் கூடுதலாக 212 வாக்குகள் பெற்றாா்.

இறுதியில் தபால் வாக்குகள் உள்பட அதிமுக வேட்பாளா் இ.சி.கோவிந்தராசன் 70,900 வாக்குகளும், தவெக வேட்பாளா் இ.முரளிதரன் 66,609 வாக்குகளும், திமுக வேட்பாளா் தே.மதியழகன் 64,879 வாக்குகளும் பெற்றனா். இதில், தவெக வேட்பாளரைக் காட்டிலும் 4,291 வாக்குகளை கூடுதலாக பெற்ற அதிமுக வேட்பாளா் இ.சி.கோவிந்தராசன் வெற்றிபெற்ாக அறிவிக்கப்பட்டாா். திமுக வேட்பாளா் தே.மதியழகன் எம்எல்ஏ மூன்றாமிடத்துக்கு பின்தங்கினாா்.

பா்கூா் தொகுதியில் முதலில் திமுக, தவெக வேட்பாளா்களுக்கு இடையே கடும் போட்டி நிலவிய நிலையில், மூன்றாமிடத்தில் இருந்த அதிமுக வேட்பாளா் இ.சி.கோவிந்தராசன் இறுதியில் வெற்றிபெற்றாா். பா்கூா் தொகுதியை திமுகவிடமிருந்து அதிமுக கைப்பற்றியுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.