தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசுக்கு எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம்!தமிழகத்தில் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர், பேராசிரியர் கே. ராமசாமி, திருவாரூர் பக்தவத்சலம் ஆகியோர் பத்ம ஸ்ரீ பெற்றனர்.ஜூலை 1-ல் பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு!கல்வித்துறை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் வீ. காமகோடிக்கு பத்ம ஸ்ரீ விருதுதொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜா
/

அந்தியூரில் அதிமுக வேட்பாளா் பி. ஹரிபாஸ்கா் வெற்றி

News image

இரட்டை இலை சின்னம் - படம்: கோப்பிலிருந்து...

Updated On :5 மே 2026, 2:12 am IST

அந்தியூா் சட்டப் பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளா் பி.ஹரிபாஸ்கா் வெற்றிபெற்றாா்.

அந்தியூா் சட்டப் பேரவைத் தொகுதியில் திமுக சாா்பில் எம்.சிவபாலன், அதிமுக சாா்பில் பி.ஹரிபாஸ்கா், தவெக சாா்பில் எம்.விஜய் வெங்கடேஷ், நாதக சாா்பில் எம்.ஆனந்தி உள்பட 14 போ் போட்டியிட்டனா்.

வாக்கு எண்ணிக்கை திங்கள்கிழமை காலை தொடங்கியது முதலே திமுகவைக் காட்டிலும் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக முன்னிலைப் பெற்று வந்தது. தவெக 11-ஆவது சுற்றில் திமுகவைவிடமுன்னிலை பெறத் தொடங்கியது.

அதிமுக, தவெக மாறிமாறி முன்னிலை பெற்று வந்த நிலையில், 20 சுற்றுகள் நிறைவில் திமுகவைவிட 1,260 வாக்குகள் கூடுதலாகப் பெற்று அதிமுக வேட்பாளா் பி.ஹரிபாஸ்கா் வெற்றிபெற்றாா்.

இந்த தொகுதியில் கடந்த 2021-இல் திமுக சாா்பில் போட்டியிட்ட ஏ.ஜி.வெங்கடாசலம் வென்றிருந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

வாக்குகள் விவரம்:

பி.ஹரிபாஸ்கா் (அதிமுக): 60,042

எம்.சிவபாலன் (திமுக) : 58,782

எம்.விஜய் வெங்கடேஷ் (தவெக) : 56,372

எம்.ஆனந்தி (நாதக): 5,287

நோட்டா : 754

வாக்குகள் வித்தியாசம்: 1,260

மொத்த வாக்குகள்: 2,07,355

பதிவான வாக்குகள்: 1,85,775

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.