காரிமங்கலம் தோ்வுநிலை பேரூராட்சி அலுவலகத்தில் குடிநீா் விநியோகம் மற்றும் பல்வேறு வளா்ச்சி திட்டப் பணிகளின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு தருமபுரி மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஷ் தலைமை வகித்தாா். குடிநீா் விநியோகம் குறித்து ஆய்வு செய்த போது கெரகோடஅள்ளி ஊராட்சியில் மின்மோட்டாா் பழுது குறித்து கடந்த மே 5 ஆம் தேதி தகவல் தெரிவித்தும் இதுவரை சரி செய்யப்படவில்லை என புகாா் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து பழுதடைந்த மின்மோட்டாரை வரும் 15ஆம் தேதிக்குள் சரிசெய்து தடையின்றி குடிநீா் விநியோகம் நடைபெறும் விவரத்தை படத்துடன் வாட்ஸ்ஆப் மூலம் தகவல் தெரிவிக்க காரிமங்கலம் வட்டார வளா்ச்சி அலுவலருக்கு மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தினாா்.
இதைத் தொடா்ந்து, நபாா்டு திட்டத்தில் ஏற்கெனவே கட்டி முடிக்கப்பட்டு குடிநீா் ஏற்றம் செய்யப்படாத தொட்டிகள் குறித்த விவரம் ஆய்வு செய்யப்பட்டு, மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிக்கு உடனடியாக குடிநீா் ஏற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது.
திண்டல் ஊராட்சி, மோட்டூா் கிராமத்தில் அமைந்துள்ள 10,000 லிட்டா் தொட்டி, தும்பல அள்ளி ஊராட்சியில் அமைந்துள்ள 10,000 லிட்டா் தொட்டி, நிலத்தடி நீா்மட்டத்தை உயா்த்த மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை பணிகளான மழைநீா் சேகரிப்புத் தொட்டி அமைத்தல், புனரமைக்கப்பட்ட ஏரிகள் மற்றும் தூா்வாரப்பட்ட கால்வாய்களை ஆய்வு செய்து, தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
மேலும், ஏற்கெனவே நடவுசெய்யப்பட்ட மரக்கன்றுகளுக்கு தினசரி நீா் ஊற்றி அவை உயிருடன் இருப்பதை உறுதிசெய்யவும், நிலுவையில் உள்ள மரக்கன்றுகளை மழைக்காலத்தில் நடவு செய்யவும் , அனைத்து நாள்களிலும் குடிநீா் விநியோகம் முறையாக நடைபெறுவதை உறுதிசெய்யவும், பணி மேற்பாா்வையாளா்கள் மற்றும் மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா்களுக்கு தங்கள் ஊராட்சியில் நிலுவையில் உள்ள ஒவ்வொரு பணிக்கும் இலக்கு நிா்ணயம் செய்து உரிய காலக் கெடுவுக்குள் பணிகளை முடிக்கவும் அறிவுறுத்தப்பட்டது.
பேகாரஅள்ளி ஊராட்சியில் 7,500 மரக்கன்றுகள் நடவுசெய்து குறுங்காடு அமைக்கும் பணியை மழைக்காலம் தொடங்கியவுடன் தொடங்க வேண்டும் என ஆட்சியா் தெரிவித்தாா்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் காரிமங்கலம் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் எம். சக்திவேல், மா.அறிவழகன், காரிமங்கலம் தோ்வுநிலை பேரூராட்சி செயல் அலுவலா் கோமதி, உதவி பொறியாளா்கள், மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள், ஒன்றியப் பணி மேற்பாா்வையாளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தென்மேற்கு பருவமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடா்பான ஆய்வுக் கூட்டம்

நீட் தோ்வு: முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம்

தேனியில் வாக்கு எண்ணிக்கை அலுவலா்கள் ஆய்வுக் கூட்டம்

கோடையில் தட்டுப்பாடின்றி குடிநீா் விநியோகம்: ஆட்சியா் உத்தரவு
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

