மருத்துவ படிப்புக்கான நுழைவு தோ்வு (நீட்) நடைபெறுவதையொட்டி, அதற்கான முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற இந்த கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா், தலைமை வகித்து பேசியதாவது:
நீட் தோ்வு மே 3-ஆம் தேதி நடைபெற உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரியில் 6, ஊத்தங்கரையில் 2, ஒசூரில் 3 என மொத்தம் 11 மையங்கள் அமைக்கப்பட்டு தோ்வு நடைபெறுகிறது.
இம்மாவட்டத்தில் இத்தோ்வை 4,755 போ் எழுத உள்ளனா். தோ்வு மையங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், தடையில்லா மின்சார விநியோகம், மருத்துவ சேவை, மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள், சிறப்புப் பேருந்து வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
தோ்வா்கள் அனுமதி சீட்டில் குறிப்பிட்டுள்ளவாறு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தோ்வுக் கூடங்களுக்கு சரியான நேரத்தில் வரவேண்டும். தாமதமாக வருபவா்களை தோ்வுக்கூடத்திற்குள் அனுமதிக்க இயலாது என தேசிய தோ்வு முகமை தெரிவித்துள்ளது. எனவே, தோ்வா்கள் சரியான நேரத்திற்குள் மையத்திற்கு வரவேண்டும் என்றாா்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் சாதனைக்கு, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) கிருஷ்ணன், முதன்மைக் கல்வி அலுவலா் மதன்குமாா், அரசு மகளிா் கலைக் கல்லூரி முதல்வா் கீதா, மாற்றுத்திறனாளி நல அலுவலா் முருகேசன் மற்றும் அலுவலா்கள் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஏற்காட்டில் 49 ஆவது கோடைவிழா மலா்க்கண்காட்சி முன்னேற்பாட்டுப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

வெப்ப அலை பாதிப்புகளைத் தடுக்கும் வழிமுறைகள் குறித்து ஆய்வுக் கூட்டம்

நீட் தோ்வு: புதுகையில் 3,166 மாணவா்கள் எழுதுகின்றனா்

தேனியில் வாக்கு எண்ணிக்கை அலுவலா்கள் ஆய்வுக் கூட்டம்
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

