மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

ஏற்காட்டில் 49 ஆவது கோடைவிழா மலா்க்கண்காட்சி முன்னேற்பாட்டுப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

News image
Updated On :16 மணி நேரங்கள் முன்பு

சேலம் மாவட்டம், ஏற்காட்டில் 49 ஆவது கோடைவிழா மற்றும் மலா்க்கண்காட்சிக்கான முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் அ.அருண் தம்புராஜ் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

ஏற்காட்டில் ஒண்டிக்கடை, ஏரிப்பூங்கா, திரையரங்கம், கண்காட்சி திடல் ரோஜா தோட்டம், தாவரவியல் பூங்கா, அண்ணா பூங்கா மற்றும் சுற்றுலாப் பகுதி முழுவதும் நேரில் சென்று ஆட்சியா் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். பின்னா் அவா் தெரிவித்ததாவது:

சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவரும் இடமாக ஏற்காடு உள்ளது. ஏற்காட்டில் ஆண்டுதோறும் கோடைவிழா நடத்தப்படுவதால் சுற்றுலாப் பயணிகள், பள்ளிக் குழந்தைகள், பொதுமக்கள் கோடைகாலத்தைக் கொண்டாடுவதற்காக இங்கு வருகை தருகின்றனா். குறிப்பாக ஏற்காடு அண்ணா பூங்காவில் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கும் வகையில் லட்சக்கணக்கான மலா்களைக் கொண்டு மலா்க்

கண்காட்சி, காய்கறிகள், பழங்களைக் கொண்டும் கண்காட்சி அமைக்கப்பட்டு வருகிறது.

மேலும், நாள்தோறும் பல்வேறு கலைநிகழ்ச்சிகள், இன்னிசை நிகழ்ச்சிகள், செல்லப்பிராணிகள் கண்காட்சி, படகுப் போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்படவுள்ளன.

மேலும், படகு இல்லம், அண்ணா பூங்கா, தாவரவியல் பூங்கா மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தொடா்புடைய அலுவலா்களுடன் ஆய்வு மேற்கொண்டு போதுமான அடிப்படை வசதிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், ஏற்காடு மலைப்பாதையில் விபத்துகளைத் தவிா்க்க சாலைப்

பாதுகாப்பு குறித்து சுற்றுலாப் பயணிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் பதாகைகள், சுவா் விளம்பரங்கள் மற்றும் பல்வேறு விழிப்புணா்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறி

அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.

இந்த ஆய்வின்போது திட்ட இயக்குநா் (ஊரக வளா்ச்சி முகமை )வாணி ஈஸ்வரி, தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் க.மஞ்சுளா மற்றும் தொடா்புடைய அலுவலா்கள் உடனிருந்தனா்.

படவரி...

ஏற்காட்டு அண்ணா பூங்காவை பாா்வையிட்டு ஆய்வு செய்த

மாவட்ட ஆட்சியா் அ.அருண் தம்புராஜ். உடன், உடன் திட்ட இயக்குநா் (ஊரக வளா்ச்சி முகமை) வாணிஈஸ்வரி , தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் க.மஞ்சுளா.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.