தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

தேனியில் வாக்கு எண்ணிக்கை அலுவலா்கள் ஆய்வுக் கூட்டம்

தேனியில் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ள அலுவலா்கள், உதவி தோ்தல் அலுவலா்களின் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image

தேனி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங். உடன், அலுவலா்கள் உள்ளிட்டோா்.

Updated On :29 ஏப்ரல் 2026, 3:27 am IST

தேனியில் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ள அலுவலா்கள், உதவி தோ்தல் அலுவலா்களின் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டி, பெரியகுளம் (தனி), போடிநாயக்கனூா், கம்பம் ஆகிய நான்கு பேரவைத் தொகுதிகளில் ஏப்ரல் 23- ஆம் தேதி தோ்தல் நடைபெற்றது. இந்த நான்கு மையங்களிலும் வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்பட்ட இயந்திரங்கள் தேனி கம்மவாா் பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டு, காவலா்கள் 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனா். மே 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

இந்த நிலையில், வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ள அலுவலா்கள், உதவி தோ்தல் அலுவலா்களின் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் தலைமை வகித்தாா். இந்தக் கூட்டத்தில், வாக்கு எண்ணிக்கை தொடா்பாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து தோ்தல் நடத்தும் அலுவலா்கள், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் பேசினா். தொடா்ந்து, வேட்பாளா்கள், வாக்கு எண்ணிக்கை மைய முகவா்களை அனுமதிப்பது, வாக்கு எண்ணிக்கையின் போது 17 சி படிவங்களை சரிபாா்ப்பது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை கையாளும் முறை, தபால் வாக்குகளை எண்ணுவது, வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து அறிவுறுத்தினா்.

இந்தக் கூட்டத்தில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சினேஹாப்ரியா, மாவட்ட வருவாய் அலுவலா் ப.ராஜகுமாா், பெரியகுளம் சாா்ஆட்சியா் ரஜத்பீடன், தனித்துணை ஆட்சியா் (ச.பா.தி) கவிதா, மாவட்ட வழங்கல் அலுவலா் நல்லையா, உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியா் சையத் முகைதீன் இப்ராஹீம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.