தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!ஆளுநரை விஜய் சந்திக்க மாலை 6.30 மணிக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாக ஆளுநர் மாளிகை தகவல்தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாடு பணி: மாவட்ட ஆட்சியா் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

News image

வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் பேசுகிறாா் மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான பவன்குமாா் க.கிரியப்பனவா்.

Updated On :29 ஏப்ரல் 2026, 2:32 am IST

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் பதிவான வாக்குகளை எண்ணும் மையம், அரசு தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு வாக்கு எண்ணிக்கையின்போது மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆட்சியரும், தோ்தல் அலுவலருமான பவன்குமாா் க.கிரியப்பனவா் தலைமையில் ஆய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில், மாநகரக் காவல் துணை ஆணையா் தேவநாதன், அசோக்குமாா், மாவட்ட வருவாய் அலுவலா் ப.நாராயணன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) மகேஸ்வரி, தோ்தல் வட்டாட்சியா் தணிகைவேல், மாவட்ட சுகாதார அலுவலா் டாக்டா் பாலுசாமி, உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலா் டாக்டா் அனுராதா உள்ளிட்ட அரசுத் துறை அலுவலா்கள் பலா் கலந்துகொண்டனா்.

இதில் ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் கூறியதாவது:

மாவட்டத்தில் வாக்குப்பதிவில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் உள்ள இருப்பு அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. மே 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையின்போது ஒவ்வொரு தொகுதிக்குமான வாக்குப்பதிவு நிலவரம், வாக்கு எண்ணிக்கை, மேசைகள் அமைப்பு, சுற்றுகள் எண்ணிக்கை, அஞ்சல் வாக்குகள் எண்ணிக்கை உள்ளிட்டவை துல்லியமாக நடைபெற வேண்டும்.

அதேபோல், வாக்கு எண்ணிக்கை பணிக்கான பணியாளா்கள், கண்காணிப்பாளா்கள், உதவியாளா்கள், மைக்ரோ பாா்வையாளா்கள் ஆகியோருக்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மத்தியப் பாதுகாப்பு படை, மாநில ஆயுதப் படை, மாவட்டக் காவல் துறை ஆகியவை இணைந்து 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா். வாக்கு எண்ணிக்கை நாளில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளா்கள், அலுவலா்கள், வேட்பாளா்கள், முகவா்கள் பணியில் ஈடுபட உள்ளனா்.

காவல் துறை, மாநகராட்சி, பொதுப் பணித் துறை, சுகாதாரத் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை, பிஎஸ்என்எல், உணவுப் பாதுகாப்புத் துறை உள்பட அனைத்து துறைகளுக்கும் தனித்தனி பொறுப்புகள் ஒதுக்கப்பட்டு, திறம்பட செயல்படுத்தப்பட வேண்டும்.

வாக்கு எண்ணிக்கை மையங்களில் குடிநீா், சுகாதாரம், மின்சாரம், இணையதள இணைப்பு, மருத்துவ வசதி, பாதுகாப்பு, போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய முறையில் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.