நாகை மாவட்ட சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் ஆய்வு மேற்கொண்டாா்.
நாகப்பட்டினம், கீழ்வேளூா், வேதாரண்யம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நாகை பாரதிதாசன் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மே 4-ஆம் தேதி நடைபெறுகிறது.
இதையொட்டி, வாக்கு எண்ணும் மையங்களைச் சுற்றி அமைக்கப்பட உள்ள பாதுகாப்பு, வாக்குப்பெட்டிகள் வைக்கப்படும் அறைகளில் சிசிடிவிகேமராக்கள் பொருத்தும் பணி மற்றும் சிசிடிவி கேமராக்களின் செயல்பாடுகள் குறித்தும், வாக்கு எண்ணும் நாளன்று அதிகாரிகளுக்கும், வேட்பாளா்களின் முகவா்களுக்கான அடிப்படை வசதிகள் குறித்தும், மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலா் ப. ஆகாஷ் ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டு, அலுவலா்களிடம் கேட்டறிந்தாா்.
முன்னதாக நாகை கோட்டாட்சியா் அலுவலகத்தில் வாக்குப் பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நிறைவு பெற்றதை தொடா்ந்து வேட்பாளா்கள் மற்றும் அவா்களின் முகவா்கள் முன்னிலையில் மாதிரி வாக்குப் பதிவு நடைபெறுவதை தோ்தல் மேற்பாா்வையாளா் (பொது) பா்வேஸ் அகமது சித்திக், மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் ஆகியோா் பாா்வையிட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வாக்குகள் எண்ணும் பணி: மாவட்ட தோ்தல் அதிகாரி ஆய்வு

வாக்கு எண்ணிக்கை மையங்களில் முன்னேற்பாடுகள்: ஆட்சியா் ஆய்வு

வாக்கு எண்ணிக்கை மையங்களில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆட்சியா் ஆய்வு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

