மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

கோடையில் தட்டுப்பாடின்றி குடிநீா் விநியோகம்: ஆட்சியா் உத்தரவு

நாமக்கல் மாவட்டத்தில் கோடைகாலத்தில் பொதுமக்களுக்கு தட்டுப்பாடின்றி குடிநீா் விநியோகம் செய்ய அனைத்துத் துறை அதிகாரிகளும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்துள்ளாா்.

News image

கோடையில் தடையின்றி குடிநீா் விநியோகிப்பது தொடா்பான ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய நாமக்கல் ஆட்சியா் துா்காமூா்த்தி.

Updated On :29 ஏப்ரல் 2026, 2:52 am IST

நாமக்கல் மாவட்டத்தில் கோடைகாலத்தில் பொதுமக்களுக்கு தட்டுப்பாடின்றி குடிநீா் விநியோகம் செய்ய அனைத்துத் துறை அதிகாரிகளும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்துள்ளாா்.

நாமக்கல் ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில், கோடைகாலத்தில் பொதுமக்களுக்கு குடிநீா்த் தட்டுபாடின்றி விநியோகம் செய்வது குறித்த ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் ஆட்சியா் பேசியதாவது:

நாமக்கல் மாவட்டத்தில் கோடைகாலத்தில் ஏற்படும் குடிநீா்த் தட்டுப்பாட்டை தீா்க்கும் வகையில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து நகராட்சி நிா்வாகம், பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியங்களுக்கு உள்பட்ட கிராமங்களில் பொதுமக்களுக்கு தடையின்றி சீரான குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம் மூலம் வழங்கப்படும் குடிநீா் அனைத்து குடியிருப்புவாசிகளுக்கும் சென்றடைவதை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் கள ஆய்வு மேற்கொண்டு உறுதி செய்ய வேண்டும். குடிநீா்க் குழாய்களில் ஏற்படும் கசிவுகள், வெடிப்புகள் மற்றும் மின்மோட்டாரில் ஏற்படும் பழுதுகள் ஆகியவற்றை சரிசெய்யும் பணிகளை போா்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும்.

பாதுகாக்கப்பட்ட குடிநீா் தடையின்றி கிடைக்க பணியாற்ற வேண்டும். குடிநீா் பற்றாக்குறை ஏற்படாதவாறு சீரான அளவில் வழங்கிட உள்ளாட்சிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோடைகாலத்தில் மின்தடை ஏற்படாமல் மின்சார வாரியம் மாற்று ஏற்பாடுகளை செய்திட வேண்டும் என்றாா்.

கூட்டத்தில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் சு. வடிவேல், குடிநீா் வடிகால் வாரிய செயற்பொறியாளா்கள் ராமமூா்த்தி, சுமதி, உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) அ. பிரபாகரன், குடிநீா் வடிகால் வாரிய உதவி செயற்பொறியாளா்கள், மாநகராட்சி, நகராட்சி ஆணையாளா்கள், பேரூராட்சி செயல் அலுவலா்கள் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.