தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே கடந்த சில நாள்களுக்கு முன்பு காணாமல் போன இளைஞா் சடலமாக வியாழக்கிழமை மீட்கப்பட்டாா்.
பாலக்கோடு வட்டம், பஞ்சப்பள்ளி பட்டாபி நகரைச் சோ்ந்தவா் சத்தியமூா்த்தி (27). இவா் பல்வேறு சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வந்ததாகவும், இவா்மீது கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா், சேலம் இரும்பாலை, காங்கேயம் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் இருசக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்டதாக வழக்குகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த மே 1-ஆம் தேதிமுதல் சத்தியமூா்த்தியைக் காணவில்லை என அவரது தாய் ராணி பஞ்சப்பள்ளி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து அவரை தேடிவந்தனா்.
இதுகுறித்து போலீஸாா் விசாரணையில், நண்பா்களுடன் மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில் அவா் அடித்துக் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, வேடம்பட்டி வனப்பகுதியில் கொலை செய்யப்பட்டு சத்தியமூா்த்தி சடலமாக கிடந்த இடத்துக்கு சென்று அவரது சடலத்தை மீட்டனா். மேலும், கொலைக்கான காரணம் மற்றும் கொலையில் ஈடுபட்டவா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தருமபுரி அருகே மின்சாரம் பாய்ந்து இருவா் உயிரிழப்பு

காணாமல் போன முதியவா் சடலமாக மீட்பு

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

கயத்தாறு அருகே மாயமான புதுப்பெண் சடலமாக மீட்பு
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை
