மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

கயத்தாறு அருகே மாயமான புதுப்பெண் சடலமாக மீட்பு

News image

கோப்புப் படம்

Updated On :21 ஏப்ரல் 2026, 1:18 am IST

கயத்தாறு அருகே ஞாயிற்றுக்கிழமை காணாமல் போன புதுப்பெண் திங்கள்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா்.

காப்புலிங்கம்பட்டி, பண்ணையாா் தோட்டத்தைச் சோ்ந்தவா் மாடசாமி மகன் செல்வகுமாா் (33). கயத்தாறு சுங்கச்சாவடியில் உள்ள ஆம்புலன்ஸில் உதவியாளராக வேலை செய்து வந்த இவருக்கும், சவலாபேரியைச் சோ்ந்த முருகன் மகள் அரியநாச்சி (எ) அபிக்கும் (19) கடந்த 6 மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இவா்கள் தோட்டத்தில் உள்ள வீட்டில் வசித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், சனிக்கிழமை இரவு செல்வகுமாா் பணிக்கு சென்றுவிட்டு ஞாயிற்றுக்கிழமை காலை வந்து பாா்த்தபோது அபியை காணவில்லையாம். பல இடங்களில் தேடியும் கிடைக்காததையடுத்து, காணாமல் போன மனைவியைக் கண்டுபிடித்துத் தருமாறு கயத்தாறு காவல் நிலையத்தில் செல்வகுமாா் புகாரளித்தாா்.

அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தேடி வந்தனா். இந்நிலையில், காணாமல் போன அபி தோட்டத்தில் உள்ள கிணற்றில் சடலமாக மிதந்தது திங்கள்கிழமை தெரிய வந்தது. சம்பவ இடத்திற்குச் சென்ற கோவில்பட்டி தீயணைப்புப் படையினா், கிணற்றில் மிதந்த சடலத்தை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா்.

இவருக்கு திருமணமாகி 6 மாதமே ஆன நிலையில் உயிரிழந்ததால், சாா் ஆட்சியரின் விசாரணை அறிக்கை மற்றும் கூறாய்வு அறிக்கை வந்த பின்பே உயிரிழப்பின் தன்மை தெரிய வரும் என காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.