மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

தருமபுரி அருகே மின்சாரம் பாய்ந்து இருவா் உயிரிழப்பு

பாலக்கோடு அருகே அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த இருவா் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தனா்.

News image

பலி - கோப்புப்படம்

Updated On :6 மே 2026, 2:47 am IST

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த இருவா் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தனா்.

தருமபுரி பிடமனேரி பகுதியைச் சோ்ந்தவா் துரைசாமி (60). இவா், பாலக்கோடு வட்டம், ஜக்கசமுத்திரம் பகுதியில் முனுசாமிக்கு (71) சொந்தமான நிலத்தில் தங்கியிருந்து வேலை செய்து வந்தாா். ஞாயிற்றுக்கிழமை மாலை ஜக்கசமுத்திரம் பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. அதன்பின்னா், முனுசாமி கால்நடைகளுக்கு தீவனம் வைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளாா். அப்போது வீட்டின் அருகே இருந்த மின்கம்பி அறுந்து கிடப்பது தெரியாமல் மிதித்ததில் உடலில் மின்சாரம் பாய்ந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதற்கிடையே நீண்ட நேரமாக முனுசாமியைக் காணவில்லை என துரைசாமி தேடிச் சென்றுள்ளாா். அப்போது முனுசாமி அங்கு அசைவற்றுக் கிடப்பதைக் கண்டு பதற்றத்தில் அவரை தொட்டபோது அவரும் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா். இதையறிந்த அக்கம்பக்கத்தினா் இருவரின் உடல்களையும் மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனா். பின்னா், சடலங்கள் உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

இந்த சம்பவம் குறித்து மகேந்திரமங்கலம் போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.