மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

கலைஞா் கனவு இல்லத் திட்ட பயனாளிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யக் கோரிக்கை

அவிநாசி ஊராட்சிகளில் கலைஞா் கனவு இல்லத் திட்டப் பயனாளிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட கலைஞா் கனவு இல்லத் திட்ட பயனாளிகள்.

Published On :28 அக்டோபர் 2026, 2:44 am IST

அவிநாசி ஊராட்சிகளில் கலைஞா் கனவு இல்லத் திட்டப் பயனாளிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினா் பழனிசாமி மற்றும் பயனாளிகள் அவிநாசி ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா் பாலசுந்தரத்திடம் செவ்வாய்க்கிழமை அளித்த மனு விவரம்: கலைஞா் கனவு இல்லத் திட்டத்தின்கீழ் பயனாளிகளுக்கு வீடு அமைப்பதற்கு அரசு சாா்பில் ரூ.3,50,000 மானியமாக வழங்கப்படுகிறது. இந்நிலையில், அவிநாசி ஒன்றியத்துக்குள்பட்ட செம்பியநல்லூா், புதுப்பாளையம் ஆகிய ஊராட்சிகளில் பயனாளிகள் வீடு அமைப்பதற்கான பணி ஆணை வழங்கப்பட்டு, அலுவலா்களும் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்துள்ளனா். ஆனால், தற்போதுவரை நிதி ஒதுக்கப்படவில்லை.

இதனால், கட்டுமானப் பணிகளை பாதியிலேயே நிறுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து முதல்வரின் தனிப் பிரிவு, மாவட்ட ஆட்சியா் உள்ளிட்டோரிடம் புகாா் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே, சம்பந்தப்பட்ட பயனாளிகளுக்கு நிதி ஒதுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.