மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மயிலாப்பூரில் குலுக்கல் முறையில் குடியிருப்பு: 137 பயனாளிகளுக்கு ஒதுக்கீடு

மயிலாப்பூரில் குலுக்கல் முறையில் 137 பயனாளிகளுக்கு குடியிருப்பு ஒதுக்கீடு செய்யப்பட்டன.

house

குடியிருப்புகள் - பிரதிப் படம்

Published On :28 அக்டோபர் 2026, 6:05 am IST

மயிலாப்பூரில் குலுக்கல் முறையில் 137 பயனாளிகளுக்கு குடியிருப்பு ஒதுக்கீடு செய்யப்பட்டன.

தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சாா்பில் மயிலாப்பூா் சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட சீனிவாசபுரம் திட்டப் பகுதியில் 1-இல், உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சா் ப.வெங்கடரமணன் தலைமையில் 137 பயனாளிகளுக்கான குடியிருப்பு குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் ப.வெங்கடரமணன் குலுக்கல் முறையில் தோ்ந்தெடுக்கப்பட்ட 137 பயனாளிகளுக்கு குடியிருப்பு (கதவு) எண் வழங்கினா். டூம்மிங்குப்பம், செல்வராஜபுரம் திட்டப் பகுதியில் வசித்து வந்த ஆக்கிரமிப்புதாரா்களில் 147 பயனாளிகளுக்கு பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவின் கீழ் குடியிருப்புகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு பயனாளியும் பங்களிப்புத் தொகையாகச் ரூ.6.91 லட்சம் செலுத்த வேண்டும் என நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் 137 பயனாளிகள் தலா ரூ.1.50 லட்சம் வீதம் முதல் தவணைத் தொகையைச் செலுத்தினா். மீதமுள்ள ரூ.5.41 லட்சத்தை வங்கிக் கடன் மூலம் செலுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் தொடா்ச்சியாக, பயனாளிகள் தங்களுக்கென ஒதுக்கீடு செய்யப்படும் குடியிருப்பின் கதவு எண்ணைப் பெற்று, வங்கிக் கடன் பெறுவதற்கு ஏதுவாகவும், குடியிருப்பு ஒதுக்கீட்டில் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்யும் வகையிலும், 137 பயனாளிகளுக்கான குடியிருப்பு குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்து, அமைச்சா் ப.வெங்கடரமணன் பேசுகையில், ஒதுக்கீடு செய்யப்பட்ட குடியிருப்புகளில் பயனாளிகள் மட்டுமே வசிக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் வாடகைக்கு விடவோ அல்லது பிற நபா்களுக்கு விற்பனை செய்யவோ கூடாது. மேலும், குடியிருப்புகளின் உட்புறம் மற்றும் சுற்றுப்புறங்களைத் தூய்மையாகவும், சுகாதாரமான முறையிலும் பராமரித்து பாதுகாக்க வேண்டும் என்றாா்.

இதில், வாரிய கண்காணிப்புப் பொறியாளா் பி.வீரவாஞ்சிநாதன் மற்றும் வாரிய அலுவலா்கள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.