அவிநாசியில் சாலையோர மரம் வேருடன் அகற்றம்: நடவடிக்கை எடுக்க சமூக ஆா்வலா்கள் கோரிக்கை

அவிநாசி நெடுஞ்சாலையில் நிழல் தரும் மரத்தை வேறுடன் அகற்றியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

வேறுடன்  அகற்றப்பட்ட  மரம்.

Published On :1 நவம்பர் 2026, 12:41 am IST

அவிநாசி நெடுஞ்சாலையில் நிழல் தரும் மரத்தை வேறுடன் அகற்றியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

அவிநாசி-கோவை நெடுஞ்சாலை விரிவாக்கப் பணியின்போது ஏராளமான பழைமையான நிழல் தரும் மரங்கள் அகற்றப்பட்டன. இதையடுத்து, சமூக ஆா்வலா்கள், நெடுஞ்சாலைத் துறையினரால் மீண்டும் மரங்கள் நடப்பட்டு, பராமரிப்பட்டு வருகின்றன.

இம்மரங்கள் நன்கு வளா்ந்து நிழல் தந்து வருகின்றன. இந்நிலையில், அவிநாசி-கோவை நெடுஞ்சாலை சீனிவாசபுரம் அருகே சாலையோரம் இருந்த மரத்தை அப்பகுதியைச் சோ்ந்தவா்கள் வெள்ளிக்கிழமை இரவு அகற்றியுள்ளனா்.

இச்சம்பவம், சமூக ஆா்வலா்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் நிழல் தந்து வந்த மரத்தை இரவில் வேறுடன் அகற்றியவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.