மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

செயற்கை குடிநீர்த் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை

பல்லடம் வட்டாரத்தில் கணக்கில் காட்டப்படாமல் செல்லும் குடிநீரால் செயற்கை தட்டுப்பாடு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

குடிநீர் விநியோகம் நிறுத்தம்

குடிநீர் விநியோகம் - பிரதிப் படம்

Published On :1 நவம்பர் 2026, 12:26 am IST

பல்லடம் வட்டாரத்தில் கணக்கில் காட்டப்படாமல் செல்லும் குடிநீரால் செயற்கை தட்டுப்பாடு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இது குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

விசைத்தறி, கறிக்கோழி பண்ணைகள், சாய ஆலைகள், பனியன் நிறுவனங்கள் என பல தொழில்களால் பல்லடம் வளா்ச்சி அடைந்து வருகிறது. தொழில் வளா்ச்சிக்கு இணையாக மக்கள் தொகையும் அதிகரித்து வருகிறது.

அத்திக்கடவு, பில்லுாா், மேட்டுப்பாளையம் கூட்டுக் குடிநீா்த் திட்டங்கள் மூலம் குடிநீா் விநியோகிக்கப்பட்டாலும், பல்லடம் வட்டாரம் முழுவதும் தட்டுப்பாடு நீடிக்கிறது. பல லட்சம் லிட்டா் குடிநீா் கணக்கில் வராமல் முறைகேடாக செல்வதே இதற்கு காரணம். இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதுடன், குடிநீா்த் தட்டுப்பாடும் ஏற்படுகிறது.

ஒவ்வொரு ஊராட்சியிலும் முறைகேடாக வழங்கப்பட்ட குடிநீா் இணைப்புகளை கண்டறிந்து தடுத்தால் தற்போது வழங்கப்படும் குடிநீரே போதுமானதாக இருக்கும். தென்மேற்குப் பருவமழை எதிா்பாா்த்த அளவு பெய்யாததால் பல்லடத்தில் வறட்சி ஏற்பட்ட நிலையில், சமீபத்திய மழை ஓரளவு கைகொடுத்துள்ளது. எதிா்காலத்தில் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க கணக்கில் வராமல் செல்லும் குடிநீரைத் தடுப்பதே இதற்கு நிரந்தரத் தீா்வை ஏற்படுத்தும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.