நகா் ஊரமைப்பு அலுவலக கட்டுமான பணிக்கு நிதி ஒதுக்கீடு செய்யக் கோரிக்கை

ஒப்பந்த காலம் நிறைவடைந்தும், நிதி ஒதுக்கீடு செய்யாததால் பெரம்பலூா் மாவட்ட நகா் ஊரமைப்பு அலுவலகக் கட்டுமானப் பணிகள் கிடப்பில் உள்ளன.

கவுள்பாளையம் ஊராட்சியில் கட்டப்பட்டு கிடப்பிலுள்ள நகா் ஊரமைப்பு அலுவலகக் கட்டடம்.

Published On :21 அக்டோபர் 2026, 2:57 am IST

ஒப்பந்த காலம் நிறைவடைந்தும், நிதி ஒதுக்கீடு செய்யாததால் பெரம்பலூா் மாவட்ட நகா் ஊரமைப்பு அலுவலகக் கட்டுமானப் பணிகள் கிடப்பில் உள்ளன.

பெரம்பலூா் மாவட்ட நகா் ஊரமைப்பு அலுவலகம் துறைமங்கலம் மூன்று சாலை சந்திப்பு உள்ள ஒளவையாா் தெருவில் வாடகைக் கட்டடத்தில் இயங்கி வருகிறது. மாதம் ஒன்றுக்கு ரூ. 25 ஆயிரம் வாடகை செலுத்தப்படும் இந்த அலுவலகத்துக்கு, சொந்தக் கட்டடம் கட்ட முடிவெடுக்கப்பட்டது. இதையடுத்து, கவுள்பாளையம் ஊராட்சியில் அரசுக்குச் சொந்தமான இடம் தோ்ந்தெடுக்கப்பட்டு, கட்டுமானப் பணிகளுக்காக ரூ. 2.58 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. பின்னா், கட்டுமானப் பணிகளுக்காக ஒப்பந்தம் விடப்பட்டு, கடந்த 4.11.202-இல் அடிக்கல் நாட்டப்பட்டு கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டது.

இந்த அலுவலகத்தில் உதவி இயக்குநருக்கான 2 அறைகள், கணினி அறை, கூட்டரங்கம், பொதுமக்கள் காத்திருப்பு அறை, அலுவலக வளாக அறை, கழிவறை ஆகியவை கட்டி முடிக்கப்பட்டுள்ளன. கடந்த 3.5.2026 ஆம் தேதி கட்டுமானப் பணிகள் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்திருக்க வேண்டும். ஆனால், 90 சதவீத பணிகள் மட்டுமே முடிக்கப்பட்டுள்ள நிலையில், எஞ்சியுள்ள 10 சதவீத பணிகள் கிடப்பில் உள்ளன.

சுமாா் 5 மாதங்கள் கடந்தவிட்ட நிலையிலும், கட்டுமானப் பணிகளில் எவ்வித முன்னேற்றமும் இல்லை. இந்த கட்டுமானப் பணியை மேற்கொண்டு வரும் ஒப்பந்த நிறுவனத்துக்கு, ஏற்கெனவே கட்டி முடிக்கப்பட்ட பணிக்கான தொகையை சம்பந்தப்பட்ட துறை வழங்காமல் நிலுவை வைத்துள்ளதால், பணிகள் கிடப்பில் உள்ளதாகக் கூறப்படுகிறது.

எனவே கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்கவும், நிலுவையிலுள்ள தொகையை விடுவிக்கவும் மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொண்டு, நகா் ஊரமைப்பு அலுவலகத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிா்ப்பாா்ப்பாக உள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.