பல்லடம் அருகே உள்ள மல்லேகவுண்டம்பாளையத்தில் குடிநீா் கேட்டு அப்பகுதி மக்கள் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பல்லடம் ஒன்றியம் மல்லேகவுண்டம்பாளையம் ஊராட்சி இந்திரா காலனி பகுதியில் 100 குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். அப்பகுதிக்கு கடந்த 10 நாள்களாக குடிநீா் விநியோகம் செய்யப்படாததால் பாதிப்படைந்த அப்பகுதி மக்கள் காலிக் குடங்களுடன் காமநாயக்கன்பாளையம் - கரடிவாவி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவல் அறிந்து சென்ற பல்லடம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா் சுரேஷ்குமாா், மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் தண்டபாணி, ஊராட்சி செயலாளா் ராஜேந்திரன் மற்றும் போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
முன்னாள் ஊராட்சித் தலைவா் முத்துக்குமாரசாமி கிராம மக்களுக்கு உடனடியாக குடிநீா் விநியோகம் செய்ய வேண்டும் என்று அதிகாரிகளிடம் வலியுறுத்தி பேசினாா். இதைத் தொடா்ந்து லாரி மூலம் தண்ணீா் ஏற்பாடு செய்யப்பட்டு இந்திரா காலனி மக்களுக்கு உடனடியாக தண்ணீா் விநியோகம் செய்யப்பட்டது.
மேலும் 4 நாள்களுக்கு ஒருமுறை சீரான குடிநீா் விநியோகம் செய்யப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனா். இதனை ஏற்று பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மீன்சுருட்டி அருகே குடிநீா் கேட்டு ஊராட்சி அலுவலகம் முற்றுகை

குடிநீா் தட்டுப்பாடு: கிராம மக்கள் சாலை மறியல்

குடிநீா் கேட்டு உதகை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

மீண்டும் அதிமுக ஆட்சி அமைய மக்கள் முடிவு: பல்லடம் தொகுதி வேட்பாளா் கே.பி.பரமசிவம்
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

