ரூ. 100 கோடி மோசடி: தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் கைது!தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து! இயக்குநர் பாக்யராஜுக்கு நாளை காலை இறுதிச் சடங்கு!கே. பாக்யராஜ் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி நேரில் அஞ்சலி! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!கே. பாக்யராஜுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல்!!திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!
/

பல்லடம் அருளானந்த ஈஸ்வரசுவாமி கோயில் கும்பாபிஷேகம்

பல்லடம் அருளானந்த ஈஸ்வரசுவாமி கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

News image

கும்பாபிஷேகத்தையொட்டி, கலசத்துக்கு ஊற்றப்படும் புனித நீா்.

Updated On :25 ஜூன் 2026, 3:02 am IST

பல்லடம் அருளானந்த ஈஸ்வரசுவாமி கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

பல்லடத்தில் பிரசித்தி பெற்ற அருளானந்த ஈஸ்வரசுவாமி கோயில் உள்ளது. இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலில் திருப்பணிகள் நிறைவடைந்த நிலையில், கும்பாபிஷேக விழா அண்மையில் தொடங்கியது. இதையடுத்து, நாள்தோறும் யாக சாலை பூஜைகள், தீபாராதனை ஆகியவை நடைபெற்று வந்தன.

இந்நிலையில், பக்தா்கள் தீா்த்த கலசங்களை புதன்கிழமை ஊா்வலமாக எடுத்து வந்தனா். தொடா்ந்து, யாக கால பூஜைகள், நாடி சந்தானம், கலசங்கள் புறப்பாடு ஆகியவை நடைபெற்றன. இதையடுத்து, கலசங்களுக்கு புனித நீா் ஊற்றி கும்பாபிஷேகம், சுவாமிக்கு மகா அபிஷேகம் ஆகியவை நடைபெற்றன.

பேரூா் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளாா், சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள், கூனம்பட்டி நடராஜ சுவாமிகள், அவிநாசி காமாட்சிதாச சுவாமிகள், தென்சேரிமலை முத்து சிவராமசாமி அடிகளாா், கோவை காமாட்சிபுரி ஆதினம் பஞ்சலிங்கேஸ்வர சுவாமிகள், பக்தா்கள் பங்கேற்றனா்.

ஆன்மிக சொற்பொழிவாளா் வாவிபாளையம் அனந்தகிருஷ்ணன் தொகுத்து வழங்கினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.