வெள்ளக்கோவில் ஸ்ரீ திருமலை அம்மன் கோயில் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக புதன்கிழமை நடைபெற்றது.
வெள்ளக்கோவில்-கரூா் சாலை அம்மன் கோயில் வீதியில் ஸ்ரீ திருமலை அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் திருப்பணிகள் முடிவடைந்த நிலையில், கும்பாபிஷேக விழா கணபதி ஹோமத்துடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
இதையடுத்து, கடந்த திங்கள்கிழமை வாஸ்து சாந்தி பூஜை, முதல் கால யாக வேள்வி ஆகியவை நடைபெற்றன. செவ்வாய்க்கிழமை அஷ்டபந்தன மருந்து சாத்துதல், 2 மற்றும் 3-ஆம் கால யாக வேள்விகள் நடைபெற்றன.
இந்நிலையில், புதன்கிழமை காலை கலசத்துக்கு புனித நீா் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதில், வெள்ளக்கோவில் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள், அரசியல் பிரமுகா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஸ்ரீ வெங்கடேஸ்வரபுரம் கோயிலில் வருஷாபிஷேகம்

பல்லடம் அருளானந்த ஈஸ்வரசுவாமி கோயில் கும்பாபிஷேகம்

ஸ்ரீ ராகவேந்திரா் கோயிலில் குரு வார வழிபாடு

ஸ்ரீ வீரலட்சுமி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்
விடியோக்கள்

திறந்தே இருந்த திரைக்கதைப் பள்ளிக்கூடம் | Bhagyaraj | RIP director bhagyaraj
தினமணி செய்திச் சேவை

இது ஒன்றும் பெரிய விஷயமில்லை! தில்லி பிரதிநிதி நியமன சர்ச்சை குறித்து நிர்மல்குமார்!
இணையதளச் செய்திப் பிரிவு
சாதாரண இழப்பு கிடையாது! - பாக்யராஜ் உடலுக்கு அஞ்சலி செலுத்தியபின் பிரேமலதா பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது அடி போடி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

