தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக செல்வப்பெருந்தகை இருந்த நிலையில், அவருக்கு பதிலாக தற்போது மாணிக்கம் தாகூரை நியமித்து கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் உத்தரவிட்டுள்ளார்.
விருதுநகர் மக்களவைத் தொகுதி எம்.பி.யான மாணிக்கம் தாகூர், மக்களவை கொறடாவாகவும் இருக்கிறார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலின்போது தமிழக காங்கிரஸ் தலைமைக்கு எதிராக பல்வேறு கருத்துகளைப் பதிவிட்டிருந்தார்.
குறிப்பாக 'ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு' என்ற கருத்தை தொடர்ச்சியாக முன்வைத்தவர். திமுக மற்றும் மு.க. ஸ்டாலினுக்கு எதிராக பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.
இந்நிலையில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவரை மாற்ற அகில இந்திய காங்கிரஸ், தமிழக நிர்வாகிகளிடம் கருத்து கேட்ட நிலையில், காங்கிரஸ் அமைச்சர்கள் விஸ்வநாதன், ராஜேஷ் குமார் உள்பட பெரும்பாலானோர் மாணிக்கம் தாகூரை தலைவராக நியமிக்க வேண்டும் என்று கூறியதாக சொல்லப்படுகிறது.
சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன் திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தவெகவுக்கு ஆட்சியமைக்க ஆதரவு தெரிவித்து தவெக அமைச்சரவையிலும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary
Manickam Tagore appointed as President of Tamil Nadu Congress Committee
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தேர்தல் தோல்வி! சுயபரிசோதனை செய்யாமல் காங்கிரஸ் மீது தாக்குதல் ஏன்? மாணிக்கம் தாகூர்

இந்த மலிவான அரசியல் வேண்டாம்: கே.என். நேருவுக்கு மாணிக்கம் தாகூர் பதில்!
திமுகவின் உண்மையான முகத்தை மக்கள் பார்த்துவிட்டனர்: மாணிக்கம் தாகூர்!

தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவிப்பது குறித்து மாணிக்கம் தாகூர்! | TVK | Congress
விடியோக்கள்

திறந்தே இருந்த திரைக்கதைப் பள்ளிக்கூடம் | Bhagyaraj | RIP director bhagyaraj
தினமணி செய்திச் சேவை

இது ஒன்றும் பெரிய விஷயமில்லை! தில்லி பிரதிநிதி நியமன சர்ச்சை குறித்து நிர்மல்குமார்!
இணையதளச் செய்திப் பிரிவு
சாதாரண இழப்பு கிடையாது! - பாக்யராஜ் உடலுக்கு அஞ்சலி செலுத்தியபின் பிரேமலதா பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது அடி போடி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
