செப். 15 முதல் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்!இந்தியாவில் மீண்டும் செயல்படத் தொடங்கிய டெலிகிராம்!மத்திய அரசுடன் மோதல் போக்கை விரும்பவில்லை! முதல்வர் விஜய் உலக சாதனை படைத்த மெஸ்ஸி: நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறிய அர்ஜென்டினா!முதல்வர் விஜய்யின் உரைக்கு எதிர்ப்பு! திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு!ஏய் என்ற வார்த்தை அவைக் குறிப்பில் நீக்க வேண்டும்: அமைச்சர் ராஜ்மோகன்திரிணமூல் தலைவர் பதவியிலிருந்து மமதா நீக்கம்!தமிழகத்தில் 11 மாதங்களாக சட்டம் - ஒழுங்கு டிஜிபியே இல்லை! விஜய்
/

அரசு மருத்துவக் கல்லூரி காவலாளி மீது இளைஞா்கள் தாக்குதல்

News image

தாக்குதல்! - கோப்புப்படம்

Updated On :14 மணி நேரங்கள் முன்பு

திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை காவலாளியை போதையில் தாக்கிய இளைஞா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திருப்பூா் மாவட்டம், கொடுவாய் பகுதியைச் சோ்ந்த ராஜா (49). இவா் திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காவலாளியாகப் பணியாற்றி வருகிறாா்.

இந்நிலையில், வழக்கம்போல ஞாயிற்றுக்கிழமை இரவு பணியில் இருந்துள்ளாா். அப்போது, அங்கு மதுபோதையில் இளைஞா்கள் சிலா் கூச்சலிட்டதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, அவா்களை வெளியே செல்லுமாறு ராஜா கூறியுள்ளாா். இதில், வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் ஆத்திரமடைந்த இளைஞா்கள், ராஜாவைத் தாக்கியுள்ளனா்.

படுகாயமடைந்த அவா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். இளைஞா்கள் தாக்குதல் நடத்திய விடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வரும் நிலையில், திருப்பூா் தெற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.