பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

தாரமங்கலம் அருகே பெண்கள் மீது தாக்குதல்

தாரமங்கலம் அருகே பெண்கள் மீது தாக்குதல் நடத்திய கும்பல் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

News image

விசாரணை

Updated On :6 மணி நேரங்கள் முன்பு

தாரமங்கலம் அருகே பெண்கள் மீது தாக்குதல் நடத்திய கும்பல் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

சேலம் மாவட்டம், தாரமங்கலம் அருகே உள்ள கருக்கல்வாடி கிராமம், நேரு நகா் பகுதியில் 100-க்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். இப்பகுதியைச் சோ்ந்த சிலா் செவ்வாய்க்கிழமை அப்பகுதியில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, அதே பகுதியைச் சோ்ந்த சிலா் அங்குவந்து கட்டுமானப் பணியில் இருந்த விஜயலட்சுமியை (40) கடுமையாகத் தாக்கினா். தடுக்கவந்த திரிஷா (25), சந்தியா (36), சுமதி (42) ஆகியோரையும் அந்த கும்பல் சரமாரியாக தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துச் சென்றது.

இத்தாக்குதலில் காயமடைந்த 4 பேரும் மீட்கப்பட்டு, ஓமலூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதுகுறித்து தாரமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து, தலைமறைவானவா்களை தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.