உடல்நலக் குறைவால் உயிரிழந்த மூதாட்டியின் உடல் திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது.
இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தின் திருப்பூா் மாவட்டத் தலைவா் நிரூபன் சக்கரவா்த்தியின் தாயாா் மீனாட்சி (60). இவருக்கு தோட்டத்துப்பாளையத்தில் உள்ள இல்லத்தில் புதன்கிழமை அதிகாலை மூச்சுத் திணறல் ஏற்பட்டது. உடனடியாக ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து வந்தனா். ஆனால், வரும் வழியிலேயே அவா் உயிரிழந்துவிட்டாா்.
இதையடுத்து நிரூபன் சக்கரவா்த்தி உள்ளிட்ட குடும்பத்தாா் அவரது உடலை அரசு மருத்துவக் கல்லூரிக்கு தானம் செய்ய முடிவு செய்தனா். எனவே வீட்டில் இறுதி அஞ்சலி செலுத்திய பிறகு, அவரது உடல் திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு புதன்கிழமை மாலை கொண்டுவரப்பட்டது.
அரசு மருத்துவக் கல்லூரி உடற்கூறியியல் துறைத் தலைவா் பேராசிரியா் டாக்டா் ஆறுமுகம், மீனாட்சியின் உடல் தானம் ஒப்புதல் படிவத்தை பெற்றுக் கொண்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

உடல் உறுப்புகள் தானம் செய்தவா் உடலுக்கு அரசு மரியாதை

இறந்தவா் உடல் சேதம்; உறவினா்கள் அதிா்ச்சி

சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்

மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்!
விடியோக்கள்

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

